பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் மெர்சல்: இது சீனாவுலங்கண்ணா


சென்னை: மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

Advertisement

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் மெர்சல். படத்தில் ஜிஎஸ்டி குறித்த வசனங்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

மூன்று கெட்டப்களில் விஜய்யின் சார்மிங் நடிப்பு, ஆக்‌ஷன், காமெடி, முத்தாக மூன்று கதாநாயகிகள், மிரட்டும் வில்லன் எஸ்ஜே.சூர்யா, ஏஆர்.ரஹ்மான் இசை என பல பாசிட்டிவ் விஷயங்கள் இருந்ததால் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து உலக அளவில் பல சினிமா விழாக்களிலும் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. இப்போது மெர்சல் திரைப்படம் சீனாவில் பத்தாயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதற்கு முன்பு தங்கல், பாகுபலி 2 போன்ற படங்களை சீனாவில் விநியோகித்த எச்.ஜி.சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் மெர்சல் திரைப்படத்தையும் ரிலீஸ் செய்கிறது.

சீனாவின் மாண்டரின் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள மெர்சல் திரைப்படம் நாடு முழுவதும் பத்தாயிரம் திரையரங்குகளில் டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகிறது.

Advertisement

English Summary

Tamil blockbuster movie Mersal is all set to hit the screens in China on December 6th. The movie is getting released in ten thousand theatres in China.