சென்னை: இந்தியாவில் திரைத்துறையின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகள், மத்திய அரசால் கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறந்த முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்பட இயக்குநர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கலைகளுக்கும், படைப்புகளுக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

'மெய்யழகன்' படத்திற்குத் தேசிய விருது: இந்த 72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில், தமிழ் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் சி. பிரேம்குமார் இயக்கத்தில், கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களைத் தொட்ட 'மெய்யழகன்' படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சிறந்த ஒலிச் சேர்க்கைக்காக, ஃபீச்சர் ஃபிலிம்ஸ் (Feature Films) பிரிவில் 'ஸ்பெஷல் மென்ஷன்' (Special Mention) அங்கீகாரத்தை இப்படத்தின் ஃபிலிம் சவுண்ட் மிக்ஸ் இன்ஜினியர் சுரேன் ஜி (Film Sound Mix Engineer : Suren G) வென்று அசத்தியுள்ளார். மெய்யழகன் படத்தின் எமோஷனல் காட்சிகளுக்குத் தியேட்டரில் ஒலியமைப்பின் மூலம் உயிர் கொடுத்த இவருக்குப் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.