சென்னை: பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகவுள்ள 'ஹாய்' படத்தில் கவின் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான ஹாய் படத்தின் அறிவிப்புகள் எல்லாமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வரும் நிலையில், அனிருத் குரலில் 'ரசகுல்லா' பாடல் நாளை வெளியாகிறது. அதன் ப்ரோமோ வீடியோவை சற்றுமுன் கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisement

யஷ் தோள் மீது சாய்ந்துக் கொண்டு தம் அடிக்கும் நயன்தாராவின் காட்சி 'டாக்ஸிக்' படத்தின் "தடுமாறுதே" பாடலில் இடம்பெற்று இன்று காலை முதலே பயங்கர வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Photo Credit:

நேற்று கவினின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோவில் நயன்தாரா கையில் அருவா வைத்திருந்த காட்சிகளும் வெளியாகி வைரலான நிலையில், தொடர்ந்து நயன்தாராவின் ஆதிக்கம் சோஷியல் மீடியாவில் அதிகரித்து வருகிறது.

ஆகஸ்ட் 14 ரிலீஸ்: அடுத்த மாதம் ஏகப்பட்ட படங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. அதற்கு முக்கிய காரணமே இந்த வாரம் வெளியாகவுள்ள விஜய்யின் ஜன நாயகன் படம் தான். ஏற்கனவே ஆகஸ்ட் 14ம் தேதி சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கவின், நயன்தாரா நடித்துள்ள 'ஹாய்' படமும் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக ஆகஸ்ட் 7ம் தேதி லோகேஷ் கனகராஜின் டிசி மற்றும் மாதவன் நடித்துள்ள ஜிடி நாயுடு உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. ஆகஸ்ட் 26ம் தேதி டாக்ஸிக் படம் வெளியாக காத்திருக்கிறது.

Advertisement

ரசகுல்லாவான நயன்தாரா: ஜாங்கிரி மதுமிதா என சந்தானம் காமெடிக்கு பிறகு பிக் பாஸ் மதுமிதாவை பலரும் கூப்பிட ஆரம்பித்தது போல இந்த பாடலுக்கு பிறகு நயன்தாராவை ரசகுல்லா என்றே ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்து விடுவார்கள் போல தெரிகிறது. விஷ்ணு எடவன் வர்ணித்து வெள்ளை நிற சுடிதாரில் ரசகுல்லாவாகவே நயன்தாராவை காட்டியுள்ள விதமும் கவின் செம கலக்கலாக ஆட்டம் போட்டிருப்பதும் அருமை. ஜென் மார்ட்டின் இசையில் அனிருத் பாடியுள்ள இந்த பாடல் நாளை முழுவதுமாக வெளியாகிறது. தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Advertisement

நயன்தாரா டாமினேஷன்: கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நயன்தாராவின் டாமினேஷன் குறைந்து காணப்பட்ட நிலையில், மீண்டும் தனது ஸ்ட்ராங் ஜோனை பிடித்து டாமினேட் செய்யத் தொடங்கிவிட்டார் நயன்தாரா. யஷ்ஷின் டாக்ஸிக், கவினின் ஹாய் என அடுத்தடுத்து ஆகஸ்ட் மாதத்திலேயே 2 பெரிய படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. மேலும், சல்மான் கான் படத்திலும் நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த மூக்குத்தி அம்மன் 2 எப்போ வரும் என்று தான் ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வருகின்றனர்.

கவினுக்கு வெற்றி கிடைக்குமா?: ஸ்டார் படமே கவினுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்று அவரது ரசிகர்கள் புலம்பிய நிலையில், அதுதான் கவினுக்கு கடைசியாக வெளியான சூப்பர் ஹிட் படம் என்கிற அளவுக்கு ஒரு பிம்பத்தை கிஸ் மற்றும் மாஸ்க் படங்கள் கொடுத்து விட்டன. இந்நிலையில், ஹாய் படம் நயன்தாராவின் வரவால் கவினுக்கு இன்னொரு வெற்றியை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானால் பாக்ஸ் ஆபீஸில் பெரிய போட்டி நிலவும் என்றும் கூறப்படுகிறது.