சென்னை: என்னதான் உருண்டு புரண்டாலும் ஒட்டுற மண்தான் ஒட்டும் என்பார்கள். அந்தக் காலத்துத் திருமண பந்தங்களின் பெருமையை எத்தனை முறை புரட்டிப் பார்த்தாலும், இந்தக்காலக் கலாச்சாரத்தோடு ஒப்பிடும்போது அது தனி ரகம்தான். அன்று பெண்கள் தங்களை விட 7 முதல் 10 வயது மூத்த ஆண்களைத்தான் கரம்பிடித்தார்கள். வாழ்க்க அனுபவமும், குடும்பத்தை வழிநடத்தும் முதிர்ச்சியும் அவர்களிடம் இருக்கும் என்ற நம்பிக்கைதான் காரணம். ஆனால், இன்றோ நிலைமையே தலைகீழ்!
இன்றைய தலைமுறையில் பெண்கள் தங்களை விட வயதில் சிறிய ஆண்களைக் திருமணம் செய்து கொள்வதும், ஆண்கள் தங்களை விட வயதில் மூத்த பெண்களின் மீது காதல் வயப்படுவதும் அதிகரித்து வருகிறது. வயது பெரிய தடையில்லை... சச்சின், பிரியங்கா சோப்ரா, நடிகர் மகேஷ் பாபுவெல்லாம் திருமணம் செய்து சந்தோஷமாக வாழவில்லையா? என வியாக்கியானம் பேசி, மூத்தப் பெண்களைத் திருமணம் செய்யும் கலாச்சாரம் தற்போது தீயாகப் பரவி வருகிறது.
சினிமாவிலும் இதே ட்ரெண்ட்தான்: இந்தக் கலாச்சாரத்திற்கு வித்திடும் வகையில் பல திரைப்படங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நயன்தாரா - கவின் காம்பினேஷனில் வெளியாகவிருக்கும் 'ஹாய்' படத்தின் கதையும் மூத்த பெண்ணைக் காதலிக்கும் கதைதான். அதேபோல விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா தன்னை விட 20 வயது இளைய பெண்ணான மமிதா பைஜூவைக் காதலிப்பது போலக் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
மனைவியின் புலம்பல்: திரையிலும் நிஜத்திலும் இந்த ட்ரெண்ட் எகிறிக் கொண்டிருக்கும் வேளையில், விஜய் டிவி 'நீயா நானா' டாக் ஷோவில் இதே விவகாரத்தைக் கையில் எடுத்து ஒரு விவாதத்தையே நடத்தி உள்ளது. தன்னை விட வயதில் மூத்தவரைத் திருமணம் செய்த ஆண்கள் vs இளையவரை மணந்த பெண்கள் என்ற தலைப்பில் நடந்த அந்த விவாதத்தில், பங்கேற்ற பெண் ஒருவர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். நான் எவ்வளவோ ஆசையா அத்தான், மாமானு கூப்பிட்டாலும் அவருக்குக் காதிலேயே விழாது. ஆனா, டேய் தம்பினு கூப்பிட்டா உடனே திரும்பிப் பார்க்குறாரு. எத்தனை சொன்னாலும் அந்த மனநிலை இன்னும் மாறவேஇல்லை, அதுவும் சொந்தக்காரங்க முன்னாடி தம்பினு வந்துவிடுமொ என்கிற பயம் இருக்கிறது என அந்த பெண் புலம்பியுள்ளார். இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
More Articles
- குருட்டு விஸ்வாசம் வேலைக்கு ஆகாது.. பாரதிராஜா நினைவு நீயா நானாவில் ஒரே போடாக போட்ட இளவரசு
- வெறும் காதலில் சுறுக்காதீர்கள்.. போ.. உலகம் உன்னுடையது.. நீயா நானாவில் கோபிநாத் சொன்ன வார்த்தை!
- கமருதீனுக்கு கட்டம் சரியில்லைனு போன வருசமே சொன்ன ஜோசியர்கள்.. என்னங்க அப்படியே நடந்திருக்கு - வீடியோ
- Nepoleon Son : நெப்போலியன் குடும்பத்தை சந்தித்த கோபிநாத்.. முக்கியமான விஷயம் குறித்து பேச்சு!
- தைரியம் இருந்தா.. ஒத்தைக்கு ஒத்த விவாதத்திற்கு வாங்க.. கோபிநாத்தை கதறவிட்ட நடிகை!
- கோபிநாத் பேச்சு முட்டாள் தனமா இருக்கு.. திடீரென பொங்கிய சீரியல் நடிகை.. இப்படி சொல்லிட்டாரே!