சென்னை: ஒரு படம் எந்த விதமான கதைக்களத்தைக் கொண்டதாக இருந்தாலும், எழுத்தாளர்களும் இயக்குநர்களும் எப்படியாவது படத்தின் ஏதாவது ஒரு போர்ஷனில் காதல் கதை என்பது இருந்து விடுகிறது. பல படங்களில் காதல் தான் மெயின் பிளாட்டாகவும் இருக்கிறது. ஆனால் அவை சில நேரங்களில் கை கொடுக்கின்றன, சில நேரங்களில் சொதப்பல். காரணம், அரைத்த மாவையே அரைப்பது தான் பிரச்னை.

Advertisement

இதனால் மொத்த படமும் ஸ்பாயில் ஆகும் அளவுக்கு மாறி விடுகிறது. இப்படி இருக்கையில் சமீப காலமாக காதல் என்ற போர்ஷனே இல்லாமல் படங்களை எடுக்கவும், வெப் சீரிஸ்களை இயக்கவும் அதன் மூலம் வெற்றிகளை ஈட்டவும் முடியும் என்று செய்து காட்டுவது ஆரோக்கியமான ஒன்றாக உள்ளது.

Advertisement

உதாரணத்திற்கு சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமான பிளாஸ்ட். இந்த படத்தில் காதலோ, ரொமான்ஸோ, டூயட்டோ என எதுவும் இல்லாமல், படத்தின் மையக் கதையைச் சுற்றி மட்டுமே எங்கேஜிங்கான திரைக்கதை அமைத்து பிரமாண்டமான வெற்றியை ஈட்டி உள்ளது படக்குழு. இந்த படத்தில் ப்ரீத்தி முகுந்தனுக்கு ஜோடியாக யாரும் இல்லை என்பதுதான் முக்கியமான விஷயமே. அது கதைக்கு தேவைப்படாததால் இயக்குநர் அதைக் கையில் எடுக்காதது நல்லது.

லவ் போர்ஷன்: அதேபோல் சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான வெப் சீரிஸான Pritam and Pedro வெப் சீரிஸ்ஸானது, முழுக்க முழுக்க சைபர் கிரைம் வெப் சீரிஸ். இதில் இயக்குநர் கதை எழுதி, எபிசோடுக்கு எபிசோடு மிகவும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்தது என்பது, பாராட்டுக்குரியது. மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டுள்ள இந்த திரைக்கதையில் எங்காவது லவ் போர்ஷனை சொருகி இருந்தாலும் அது சீரிஸின் வெற்றிக்கு வேகத்தடையாக தான் இருந்திருக்கும்.

Advertisement

திருப்திகரமான படம்: காதல் போர்ஷன்களே இல்லாமல், ரொமான்ஸ் இல்லாமல், டூயட் இல்லாமல், காதலிக்காக வில்லனிடம் சண்டை போடும் காட்சிகள் இல்லாமல் படம், வெப் சீரிஸ்களை உருவாக்கி அதை வெற்றி பெற வைக்க முடியும் என்பதை சமீப காலமாக அடிக்கடி பார்க்க முடிகிறது. இதற்கு முன்னரும் காதல் போர்ஷனே இல்லாமல் பல படங்களும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் சமீப காலமாக அதன் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இயக்குநர்கள் ரசிகர்களுக்கு அரைத்த மாவையே திரும்பவும் அரைத்துக் கொடுக்க கூடாது, பத்தோடு பதினொன்றாவது இயக்குநராக இல்லாமல் தான் கையாளும் கதைக்களத்தில் திருப்திகரமான படத்தை தர வேண்டும் என்ற மெனக்கெடல்களின் வெளிப்பாடுதான் இந்த எடுத்துக்காட்டுகள்.