சென்னை: ஜமா படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வரும் பாரி இளவழகன் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இந்த படத்தில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் லீட் ரோலில் நடித்துள்ளார். இதில், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி ஆகியோர் நடித்துள்ளனர். இன்று ஜூலை 17ந் தேதி தியேட்டரில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படம் குறித்து பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.
செம காமெடி: படம் பார்த்த ரசிகை ஒருவர், படம் ரொம்ப நல்லா இருந்தது, படத்தில் எல்லாவிதமான எமோஷனும் இருந்தது. உண்மையை சொல்லவேண்டும் என்றால், ரொம்ப நாள் கழித்து வாய்விட்டு சிரித்து கூஸ்பம்ஸா இருந்தது. படத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அதே போல ஆங்கில இந்தியன் சைடு இதுவரை நாங்க யோசித்து பார்த்ததே இல்லை, கதையும் வித்தியாசமாக இருந்தது. அதே போல நடிகை ரோஜா அவர்களின் படங்களை நாங்க சின்னவயதில் டிவியில் பார்த்தது, ஆனால், இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை குடும்பத்தோடும் வந்து பார்க்கலாம், நண்பர்களோடும் வந்து பார்க்கலாம் என்றார்.
டாப் நாச்: படம் பார்த்த மற்றொரு ரசிகை, காமெடி படம் என்று தெரியும் ஆனால், இந்த அளவிற்கு படத்தில் காமெடி இருக்கும் என்று நினைக்கவில்லை. படம் ஒரு வித்தியாசமான காதல் கதை, நிறைய பேர் இது போன்ற காதல் நடக்காது என்று நினைப்பார்கள், ஆனால், இயக்குநர் அழகாக இதை படமாக்கி இருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வசனம் வந்தது அது தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். முதல் பாதியைவிட இரண்டாம் பாதி 'டாப் நாச்' என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. படம் பார்த்து நன்றாக சிரித்தேன் என்றார். ஜாலியான படம்: படம் பார்த்த மற்றொரு ரசிகர், படத்தினுடைய பெயர் அன்பே டயானா. ஒரு ஜாலியான படம், எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் பார்ப்பதற்கு ஏற்ற படம். இப்போது வருகிற படங்களில் காமெடி வொர்க் அவுட் ஆவதில்லை.. ஆனால், இந்த படத்தில் காமெடி நன்றாக வொர்க் அவுட்டாகி இருக்கிறது. அதுவும் குறிப்பாக கடைசி 20 நிமிட காட்சி செம ஃபன். பெரம்பூரில் பலவிதமான மனிதர்கள் இருப்பார்கள். அந்த பகுதியை மையமாக வைத்து அங்கு வாழும் மக்கள் குறித்து காட்டி இருக்கிறார்கள். படம் உண்மையிலேயே சூப்பரா இருக்கு என்றார்.More Articles