சென்னை: இசைஞானி இளையராஜா தலைமுறைகள் தாண்டி கொண்டாடப்படுபவர். ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் அவர்; இந்த வயதிலும் பல படங்களுக்கு இசையமைத்து தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி சிம்பொனியும் உருவாக்கி பட்டையை கிளப்பினார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கிறது.

Advertisement

இந்திய சினிமாவின் இசை அடையாளமாக திகழ்ந்துகொண்டிருப்பவர் இளையராஜா. கடந்த 50 வருடங்களாக இசையமைத்துவரும் அவர் இதுவரை 1500 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இத்தனை படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் ஒரு படம் மாதிரியே இன்னொரு படத்துக்கு இசையமைக்காதது அவரது தனி சிறப்பு. அதுமட்டுமின்றி இந்தக் கால தலைமுறையினரும் அவரது இசையை கொண்டாடிவருகிறார்கள்.

Advertisement

Photo Credit:

சிம்பொனி இளையராஜா: சினிமாவில் இசையமைத்துவந்த அவர் கடந்த வருடத்தில்கூட லண்டனுக்கு சென்று சிம்பொனி இசையையும் அரங்கேற்றிவிட்டு வந்தார். இந்தியாவிலிருந்து முதன்முறையாக சிம்பொனியை அரங்கேற்றியவர் என்ற பெருமையையும் அவர் அதன் மூலம் பெற்றார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்த சூழலில்; ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பிலும் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு அப்படியே நடத்தவும் பட்டது.

பிஸியான இளையராஜா: தனக்கு எத்தனை பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டாலும் இளையராஜா அதோடு தேங்கிவிடுவதில்லை. இப்போது இன்னொரு சிம்பொனியை உருவாக்கும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி லெனின் பாண்டியன் என்ற படத்துக்கும் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில்கூட அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. மேலும், அதில் இடம்பெற்றிருந்த இசையும் வெகுவாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக தட்டு வண்டி திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Advertisement

ஆன்மீகவாதி: இளையராஜா மிகப்பெரிய ஆன்மீகவாதி ஆவார். அவரது ஸ்டூடியோவில் பெரிய சைஸில் ரமண மகரிஷி புகைப்படமும் இருக்கும். மேலும் தன்னுடைய இசைக்கு காரணமே கடவுள்தான் என்பது அவருடைய நிலைப்பாடு. மேலும் திருவண்ணாமலை கோயிலுக்கும் அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் அவரது பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.

இளையராஜா பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "1980ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு பௌர்ணமியிலும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். நான் சுற்றியதால்தான் மலை சுற்றுவது மக்களாலும் பின்பற்றப்பட்டது என்று அங்கிருக்கும் அடியார்கள் சொல்வார்கள்" என்றிருக்கிறார்.