2.0 பட்ஜெட்டைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துடும்!


சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததைவிட அதிகமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகமான '2.0' தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த ரஜினியே இப்படத்திலும் நாயகனாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதன் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கு முன்பே முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. ஏற்கனவே படம் வெளியாகும் தேதிகளை அறிவித்து தள்ளிவைத்து விட்டனர்.

கிராபிக்ஸ்:

கிராபிக்ஸ் பணிகள்:

கிராபிக்ஸ் பணிகள்:

கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்றனர். வெளிநாட்டு ஸ்டுடியோக்களில் கிராபிக்ஸ் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர். நவம்பர் இறுதியில் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிரெய்லர்:

3டி டிரெய்லர்:

3டி டிரெய்லர்:

இந்த நிலையில் 2.0 படத்தின் டிரெய்லர் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் 3 டியில் வெளியாகும் என்றும், அதே நேரத்தில் யூடியுப்பில் 2 டியில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரமாண்ட டிரெய்லர்

பாகுபலியை மிஞ்சிய டிரெய்லர்

பாகுபலியை மிஞ்சிய டிரெய்லர்

இதற்கிடையே, 2.0 படத்தின் டிரெய்லரை தணிக்கை செய்யும்போது பார்த்த ஒருவர், படக்காட்சிகள் பாகுபலியை மிஞ்சுவதாக பிரமாண்டமாக உள்ளது என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்த படம் ரூ.450 கோடி செலவில் தயாராவதாக ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் படத்தின் செலவு குறித்த புதிய போஸ்டரை படக்குழுவினர் இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர்.

பட்ஜெட்

ரூ.542 கோடி

ரூ.542 கோடி

இந்தியாவிலேயே முதல் முறையாக வி.எப்.எக்ஸ் தொழில் நுட்பத்தில் 75 மில்லியன் டாலர் செலவிடப்பட்ட படம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்திய பணமதிப்பில் 75 மில்லியன் டாலர் என்பது ரூ.542 கோடிக்கு அதிகம். இதனால் வியந்து போன ரசிகர்கள் அந்த போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

ஷங்கர்

டிவிட்டரில் ஷங்கர்

இயக்குனர் ‌ஷங்கரும் தனது டுவிட்டரில் 2.0 படத்தில் பிரமாண்டத்தை கொண்டுவர 3 ஆயிரம் தொழில்நுட்ப கலைஞர்கள் உழைத்துள்ளனர் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பொதுவாகவே ஷங்கர் படமென்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சமிருக்காது. இந்த சூழ்நிலையில் 2.0 குறித்து வரும் தகவல்களைப் பார்த்தால், இது பிரமாண்டங்களுக்கெல்லாம் பிரமாண்டமாக இருக்கும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Read More About: rajini 2 0 shankar baahubali

Have a great day!
Read more...

English Summary

It has come to know that Sankar directorial Rajini's 2.0 budget is higher than Rajamouli's Baahubali.