சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் அதிகம் பேசப்படும் போட்டி என்றால் அது ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையேயான ஃபேன் வார் தான். ஒரு படம் வெளியாகும் நேரம் வந்தாலே சமூக வலைதளங்களில் இரு தரப்பும் மாறி மாறி டிரெண்ட் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், முதலமைச்சராக பதவியேற்ற பிறகு விஜயின் முதல் மற்றும் கடைசி திரைப்படமாக வெளியாகியுள்ள ஜனநாயகன் ரிலீஸை முன்னிட்டு மீண்டும் அந்த ஃபேன் வார் சூடுபிடித்துள்ளது.

Advertisement

ஜனநாயகன் படத்திற்கு உலகம் முழுவதும் விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரிலீஸ் ஆகிவிட்டது. இது விஜய்யின் 69-வது திரைப்படம் மட்டுமல்ல, அவர் அரசியலுக்காக முழுமையாக சினிமாவை விட்டு விலகுவதற்கு முன் நடித்த கடைசி படம் என்பதால் ரசிகர்கள் இந்த ரிலீஸை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி வருகின்றனர். புக் மை ஷோவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமானோர் 'Interested' பட்டனை அழுத்தியிருப்பதும், பல இடங்களில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான கூலி படத்திற்கான முன் பதிவு, ஜன நாயகன் படத்திற்கான முன் பதிவு ஆகியவற்றை ஒப்பிட்டும் பதிவிட்டு வருகிறார்கள். இதைக் குறிப்பிட்டு சமூக வலைதள ஹைப் மற்றும் ரசிகர்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டி, "ஹைப் என்றால் இதுதான்" என்ற ரீதியில் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

அதில் அதிகம் வைரலாகி வரும் ஒரு பதிவில், கூலி மற்றும் ஜனநாயகன் படங்களின் புக் மை ஷோ செயலியில் அதிகமானோர் புக் செய்ததை ஒப்பிட்டு, கீழே ரஜினியின் புகைப்படத்துடன் "One Name To Rule The Game" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. அதனுடன், "One Last Time", "One Last Dance" என்று சிம்பதி கிரியேட் செய்தும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. சும்மாவா சொன்னோம்... CM கூட ஆகிடலாம்... ஆனால் Super Star ஆக முடியாது" என்ற வாசகங்களையும் சேர்த்து விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

ரசிகர்கள் இணையவழி மோதல்: குறிப்பாக, ஜனநாயகன் வெளியாகும் நேரத்தில் இதுபோன்ற பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவது விஜய் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பதிலடியாக விஜய் ரசிகர்களும் தங்களது சாதனைகள், ப்ரீ-சேல்ஸ் வசூல், புக் மை ஷோ பதிவுகள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து எதிர்வினையாற்றி வருகின்றனர்.

எது மாறினாலும்: சினிமா மாறலாம், வசூல் சாதனைகள் மாறலாம், அரசியல் சூழ்நிலைகளும் மாறலாம். ஆனால் ரஜினி - விஜய் ரசிகர்களுக்கு இடையேயான இந்த சமூக வலைதள ஃபேன் வார் மட்டும் ஒவ்வொரு பெரிய ரிலீஸின் போதும் புதிய வடிவத்தில் மீண்டும் மீண்டும் தலைதூக்கிக் கொண்டே இருப்பது தமிழ் சினிமாவின் மாறாத கலாச்சாரமாகவே மாறிவிட்டது.