மும்பை: இந்தியாவே எதிர்பார்த்திருக்கும் திரைப்படம் ராமாயணா. இதில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், சன்னி தியோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நித்திஷ் திவாரி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானும், ஹான்ஸ் ஜிம்மரும் இசையமைத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது.
இந்தியாவில் ராமாயணம் என்ற புராணத்துக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார். வால்மீகி எழுதியதை தமிழில் கம்பரும் எழுதியிருக்கிறார். ராமரை ராவணன் கடத்திக்கொண்டு சென்றுவிட; அவரிடமிருந்து சீதையை ராமன் மீட்பதுதான் கதை. பல பல வருடங்களாக பல தலைமுறையினர் கேட்டு கேட்டு வளர்ந்த கதை இது. சின்னத்திரைகளிலும், மேடைகளிலும் பலமுறை நாடகங்களாகவும் வந்திருக்கிறது.
ராமாயணா திரைப்படம்: சூழல் இப்படி இருக்க அதனை திரைப்படமாக்குகிறார்கள் இப்போது. ஹிந்தியில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தை நிதிஷ் திவாரி இயக்கியிருக்கிறார். நீண்ட காலமாக இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. கிட்டத்தட்ட 4,000 கோடி ரூபாயில் இப்படம் உருவாகிவருவதாகவும் பாலிவுட்டில் தகவல்கள் வட்டமடிக்கின்றன. பெரிய நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யஷ்ஷும் நடித்திருக்கிறார்கள். மேலும், சன்னி தியோல் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானும், ஹான்ஸ் ஜிம்மரும் சேர்ந்து இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்கள். கண்டிப்பாக தரமான சம்பவத்தை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பில் சாய் பல்லவி: முக்கியமாக சாய் பல்லவியின் கரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். இதற்கு முன்னர் அவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஏக் தின் பெரிய ரெஸ்பான்ஸை பெறவில்லை. எனவே இப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி தனக்கு பாலிவுட்டில் பெரிய இடத்தை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இந்நிலையில் அந்தப் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. எப்போது ட்ரெய்லர்: அதன்படி ஜூலை 30ஆம் தேதி அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலை சரியாக 4.15 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. எப்போதுமே ராமர் மீது அதீத பக்தியில் இருப்பவர்கள் வட இந்தியர்கள். இப்போது இந்தப் படத்தையும் அவ்வாறே அணுகி; ட்ரெய்லரை நல்ல நேரம் பார்த்து வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.More Articles