சென்னை: பழம்பெரும் மூத்த பாடகி ஜானகி அம்மாள் மறைவுச் செய்தி மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இப்படி இருக்கையில், மறைந்த பாடகி எஸ். ஜானகி அம்மாவின் இசை உலக வாழ்க்கையில் நடைபெற்ற பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் பத்ம பூஷன் விருதை வேண்டாம் என்று உதறியது.

Advertisement

எஸ். ஜானகி அம்மா கடந்த 1957ஆம் ஆண்டில் வெளியான தெலுங்கு படமான எம்.எல்.ஏ படத்தில் இருந்து திரையுலகில் பாடல்கள் பாடி வருகிறார். முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ளாதவர் என்றாலும், தனது குழந்தைப் பருவத்தில் நாதஸ்வர வித்வான் பைடிசாமி என்பவரிடம் சில அடிப்படைகளை மட்டும் கற்றுக் கொண்டு, பாடல்கள் பாடத் தொடங்கியவர்.

Advertisement

இவருக்கு சிறந்த பாடகிக்காக பல மாநில அரசுகளும், மத்திய அரசும் விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. குறிப்பாக,1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே படத்தில் இடம் பெற்ற படலான செந்தூரப்பூவே என்ற பாடலுக்குத்தான் முதன் முதலாக தேசிய விருது வாங்கினார். அதன் பின்னர் 1981ஆம் ஆண்டு மலையாளத்தில் ஏற்றுமானுர் அம்பலத்தில் என்ற பாடலுக்காக பெற்றார்.

தேசிய விருதுகள்: அதேபோல், 1984ஆம் ஆண்டு வெண்ணல்லோ கோதாரி என்ற தெலுங்கு பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதையடுத்து அவர் கடைசியாக பெற்ற தேசிய விருது என்றால் அது, 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் படத்தில் இடம் பெற்ற இஞ்சி இடுப்பழகா பாடலுக்காக பெற்றார். இது இல்லாமல் தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

Advertisement

பத்ம பூஷனை மறுக்க காரணம்: அவரது இசை வாழ்க்கையின் சேவையைப் பாராட்டி மத்திய அரசு கடந்த 2013ஆம் ஆண்டு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால் எஸ். ஜானகி அம்மாவோ 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் இசை துறையில் இருக்கிறேன். இந்த அங்கீகாரமானது, மிகவும் கால தாமதமாக கொடுக்கப்படும் அங்கீகாரம். எனவே எனக்கு இது தேவையில்லை. ரசிகர்களின் கைத்தட்டலும் உற்சாகமும் அவர்களின் பாராட்டும் மட்டுமே எனது அங்கீகாரம் என்று விருதை ஏற்க மறுத்துவிட்டார்.

கடைசி பாடல்: இவரது இந்த முடிவு அப்போது இந்திய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2016ஆம் ஆண்டுடன் அதாவது தனது இசை வாழ்க்கை தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னர், திரையில் பாடல்கள் பாடுவதில்லை என்ற முடிவை அவர் அறிவித்தார். கடைசியாக, 10 கல்பனைகள் என்ற மலையாள படத்தில் பாடல் பாடியிருந்தார்.