ஹைதராபாத்: நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகும் சமந்தாவுக்கும் நாக சைதன்யா குடும்பத்தில் உள்ள சிலருக்கும் இடையேயான பழக்கம் என்பது மிகவும் சிறப்பாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக நடிகர் அகில் அக்கினேனி, சமந்தா குறித்து பேசும் ஒவ்வொரு முறையும் தனது மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் சமந்தாவின் புதிய படமான எங்கள் தங்கம் ( தெலுங்கில் 'மா இண்டி பங்காரம்') குறித்து பாராட்டியிருந்த அகில், தற்போது மீண்டும் ஒருமுறை சமந்தாவைபுகழ்ந்து பேசியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

அகில் அக்கினேனி நடித்துள்ள தெலுங்கு படமான 'லெனின்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் புரமோஷன் பணிகளின் ஒரு பகுதியாக, கதாநாயகி பாக்யஸ்ரீ போர்ஸேவுடன் இணைந்து ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'டிராமா ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியில் அகில் கலந்து கொண்டார்.

Advertisement

நிகழ்ச்சியில் படம் தொடர்பான பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் அனில் ரவிபுடி அடுத்த சங்கராந்திக்கு இருவரும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று கூறியபோது, அதற்கும் அகில் அக்கினேனி நிச்சயமான இணைந்து படம் பண்ணுவோம் என்று தெரிவித்தார்.

ராம் சரண்: அதன் பிறகு சில பிரபலங்களின் புகைப்படங்களைக் காட்டி, அவர்களைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுமாறு அகிலிடம் கேட்கப்பட்டது. முதலில் சிரஞ்சீவி மற்றும் வெங்கடேஷ் குறித்து பேசிய அவர், இயக்குநர் அனில் ரவிபுடியின் புகைப்படம் காட்டப்பட்டபோது, "ஒவ்வொரு சங்கராந்திக்கும் வசூலை அள்ளிச் செல்பவர்" என்று பாராட்டினார். ராம் சரணின் புகைப்படம் வந்தபோது, "My RC... My Heartbeat" என்று பாசமாக குறிப்பிட்டார்.

Advertisement

சமந்தா: அதன் பின்னர் சமந்தாவின் சமீபத்திய படத்தின் போஸ்டர் காட்டப்பட்டபோது, ஒரு நிமிடமும் யோசிக்காமல் "ஒரு பெண்ணின் பலம் என்ன என்பதை காட்டியிருக்கிறார்" என்று அகில் பாராட்டியது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது அண்ணன் உடனான விவாகரத்துக்குப் பிறகும் சமந்தா குறித்து அவர் தொடர்ந்து பாசிட்டிவாகவே பேசி வருவது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

சமந்தாவின் ரியாக்‌ஷன்: சில நாட்களுக்கு முன்பும், சமந்தாவின் புதிய படம் குறித்து கேட்கப்பட்டபோது, லெனின் படத்தின் புரோமோஷன்களில் மிகவும் கவனமாக இருப்பதால் மா இண்ட்டி பங்காரம் படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றாலும், டிரெய்லர் மிகவும் பிடித்திருந்ததாகவும், சமந்தா சிறப்பாக நடித்திருப்பதாகவும் அகில் கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த சமந்தா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் 'லெனின்' திரைப்படத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்றும், ஏற்கனவே படத்திற்கு பிளாக்பஸ்டர் வைப் இருப்பதாகவும் பதிவிட்டிருந்தார்.

Advertisement

ரசிகர்கள்: சமந்தாவை அகில் மீண்டும் மீண்டும் பாராட்டி வருவதும், அதற்கு சமந்தாவும் அதே அன்புடன் வாழ்த்து தெரிவித்து பதிலளித்து வருவதும், அக்கினேனி குடும்பத்துடனான அவரது மரியாதையான உறவு இன்னும் தொடர்கிறது என்பதை ரசிகர்களுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது. இணையவாசிகள் சிலரோ என்னதான் விவாகரத்து ஆகி இருந்தாலும் மரியாதையும் அன்பும் குறைந்துவிடாது இல்லையா என்று பதிவிட்டு வருகிறார்கள்.