சென்னை: 72வது தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. அதில், ராயன், கேப்டன் மில்லர், மெய்யழகன், அமரன் உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தங்கலான், நந்தன், லப்பர் பந்து உள்ளிட்ட படங்களுக்கெல்லாம் விருதுகள் கொடுக்கவில்லை. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஜூரிக்களில் ஒருவராக இருந்த கலா மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் இயக்குநர் இரா.சரவணனின் பதிவு ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்திய திரைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்று தேசிய விருது. 72வது தேசிய விருதுகள் சில நாட்களுக்கு முன்பு ராயன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விருது பெறுவதற்கு தகுதியாக பல படங்கள் தமிழில் இருக்கும்போது; இவர்கள் எப்படி இந்த இரண்டு படங்களுக்கு கொடுத்தார்கள் என்று விமர்சனங்களும் எழுந்தன. இயக்குநர் இரா.சரவணன் கூட நேற்று முன்தினம் காட்டமாக ஒரு பதிவிட்டிருந்தார்.
இன்னொரு பதிவு: அதேபோல் இன்னும் சிலரோ ஜூரிக்களில் ஒருவரான கலா மாஸ்டரையும் வறுத்தெடுக்கிறார்கள். இந்நிலையில் இரா. சரவணன் வெளியிட்டிருக்கும் பதிவில், "தேசிய திரைப்பட விருதுகள் குறித்து நேற்று நான் எழுதிய பதிவு குறித்துப் பலரும் பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள். நல்லது. விருதுக்குழு தேர்வாளராகத் தமிழில் இருந்து கலா மாஸ்டர் அனுப்பப்பட்டது குறித்து என்னிடம் ஆதங்கப்பட்ட சிலர், "மானாட மயிலாட நிகழ்வுக்கு நடுவராக இருந்த ஒருவரை தேசிய திரைப்பட விருதுகளைத் தேர்ந்தெடுக்க அனுப்பினால் இந்த லட்சணத்தில்தான் இருக்கும்..." என்றெல்லாம் குறிப்பிட்டார்கள்.
அப்படி நினைப்பது தவறு: சமூக வலைத்தளப் பதிவுகள் பலவற்றில் கலா மாஸ்டரை விமர்சித்து கருத்துகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஒரு சில பதிவுகளில் உருவகேலியாக அவை நாகரிகம் மீறுவதையும் கவலையோடு கவனிக்கிறேன். தேர்வுக்குழுவுக்கு கலா மாஸ்டர் தேர்வானதை யாரும் குறை சொல்ல முடியாது. எண்ணற்ற படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றிய அனுபவமும் அறிவும் தெளிவும் கொண்டவர் கலா மாஸ்டர். திரைப்படங்கள் குறித்த அறிவு இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும்மட்டும்தான் இருக்கும் என எண்ணுவதே தவறு.
கஷ்டமாக இருந்தது: யாரையும் குறிப்பிட்ட வளையத்துக்குள் மட்டும் வைத்துப் பார்க்கும் வழக்கமே கூடாது. எத்தனையோ தகுதியான படங்கள் புறந்தள்ளப்பட்ட நிலையில் 'ராயன்', 'கேப்டன் மில்லர்' போன்ற படங்கள் தேர்வானது நியாயமா என்பது மட்டுமே என் கேள்வி. "400க்கும் மேற்பட்ட படங்களில் நல்ல படத்தைத் தேர்ந்தெடுக்க மிகுந்த சிரமப்பட்டோம். 'ராயன்' மிகச் சிறந்த படம்..." எனக் கலா மாஸ்டர் கொடுத்த பேட்டியைத்தான் ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது.
இதுதான் தவறு: மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டுமெனில், கலா மாஸ்டரை தேர்வு செய்தது சரி... கலா மாஸ்டர் தேர்வு செய்ததுதான் தவறு" என குறிப்பிட்டிருக்கிறார். இரா.சரவணனின் இந்தப் பதிவும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும், தன் மனதில் பட்டதை சரவணன் நேர்மையாக பதிவு செய்துவருவதற்கு பாராட்டையும் தெரிவித்துவருகிறார்கள்.
More Articles
- பாசக்கார அம்மா..மகனுக்கு விலை உயர்ந்த காரை பரிசளித்த கலா மாஸ்டர்!
- 37 வயதில் கர்ப்பம்.. வாழ்க்கையை மாற்றிய மகன்.. உருகிய கலா மாஸ்டர்!
- ஓவர் குடியால் சீரழிந்த முத்துக்காளை.. 3 டிகிரி வாங்க அந்த பெண் பிரபலம் தான் காரணமா?
- நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது.. கலா மாஸ்டர் செய்த வேலை.. ரம்பா சொன்ன அந்த விஷயம்!
- எனக்கு குழந்தை பிறக்குமானு சந்தேகம்.. 37 வயதில் தான் கர்ப்பமானேன்.. மனமுருகி பேசிய கலா மாஸ்டர்!
- எனக்கு ஒன்னுனா ஓடிவருவாரு.. கடைசியா பேசும் போது சொன்னேனே.. ஹுசைனி போய்ட்டியே கண்கலங்கிய கலா மாஸ்டர்!