சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் செந்தில். கவுண்டமணியுடன் சேர்ந்து பல படங்களில் நடித்த அவர்; இப்போது வயோதிக காலத்தில் அவ்வப்போது நடிக்கிறார். மற்ற நேரங்களில் தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து அவரது மகன் மணிகண்ட பிரபு பேசியிருக்கும் விஷயம் அனைவரிடத்திலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்த செந்தில் முதலில் நாடகங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். பிறகு ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைக்க அதில் சிறிய ரோல்தான். அதனைத் தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் அவர் எதிர்பார்த்தபடியான பெயர் செந்திலுக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் மலையூர் மம்பட்டியான் படத்தில் நடித்ததன் மூலம் பெரும் வெளிச்சம் கிடைத்தது அவருக்கு.
கவுண்டமணி காம்போ: அதனையடுத்து கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார் செந்தில். இரண்டு பேரின் காம்போவும் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர் என அவர்கள் நடித்த ஏராளமான படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட். கவுண்டமணி ஒருபக்கம் செந்திலை கவுண்ட்டர் அடிப்பது, உடலில் அடிப்பதும் என இருந்தாலும் செந்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் நடித்து ஸ்கோர் செய்துகொண்டிருந்தார்.
செந்திலின் பலம்: செந்திலுக்கு பலமே அவரது வெகுளித்தனமான குரலும்,முகமும்தான். அவர் தன்னுடைய உடல்மொழியை கொண்டு அனைவரையுமே சிரிக்க வைப்பார் ரசிக்க வைப்பார். இப்போது வயோதிகம் காரணமாக பெரும்பாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். அவ்வப்போது சில படங்களில் நடிக்கிறார். கடைசியாக லால் சலாம் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் செந்தில் குறித்து அவரது மகன் மணிகண்ட பிரபு பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
செந்தில் மகன் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "நாங்கள் சிறு வயதில் அப்பாவிடம், 'ஏன் எல்லா படங்களிலும் உங்களை அடிவாங்கும் காட்சிகளிலேயே நடிக்க வைக்கிறார்கள்?. ஒரு முறையாவது நீங்களும் திருப்பி அடிக்கும் காட்சிகளை இயக்குநர்களிடம் கேட்கலாமே? என சொல்வோம். அத்ற்கு அவரோ,'இயக்குநர் அந்தக் காட்சியை இப்படித்தான் நினைத்திருக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு நடிப்பதுதான் என்னுடைய கடமை. என்னுடைய விருப்பத்துக்காக இயக்குநரிடம் அவருடைய கற்பனையை மாற்ற சொல்ல முடியாது என எப்போதும் சொல்வார்.
அதற்காகத்தானா அப்படி?: இப்போது திரும்பி பார்க்கும்போதுதான்,'எங்கள் குடும்பத்துக்காகத்தான் அப்பா அந்த கடினமான கேரக்டர்களை எல்லாம் ஏற்று நடித்தார்' என்பதை உணர்கிறேன். ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்காக எவ்வளவு தியாகம் செய்கிறார் என்பதை அது எனக்கு கற்றுக்கொடுத்தது" என்றார். முன்னதாக, மணிகண்ட பிரபு சினிமாவுக்குள் வருவார் என்று பலர் சொன்ன சூழலில்; அவர் மருத்துவராகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
More Articles
- காமெடி ஜாம்பவான் செந்திலுக்கு 75 வயது நிறைவு.. தடபுடலாக நடந்த பீமரத சாந்தி விழா!
- காமெடி கிங்.. வரும் மே மாதம் வந்தா 87 வயசு.. பாண்டிச்சேரியில் கவுண்டமணியுடன் செல்ஃபி எடுத்த ஃபேன்!
- கவுண்டமணியால் வரமுடியவில்லை.. 74 வயதிலும் ரோபோ சங்கருக்காக ஓடி வந்த லெஜண்ட் செந்தில்
- நக்கல் மன்னன்னு பெயரெடுத்த கவுண்டமணி.. உருவக்கேலி செய்யாமல் காமெடி வராது போல..
- காமெடி நடிகரின் கண்ணீர் கதை: பசி பட்டினியில் துவண்டு போகாத செந்தில்.. 14வருட வனவாசத்தில் ஜெயித்த கதை
- கணவருக்காக செந்திலுடன் சண்டை போட்ட மருமகள்.. என்ன காரணம் தெரியுமா?