ரஜினி ரசிகர்களே.. இந்த டைமை மனசுல குறிச்சு வச்சுக்கங்க!


சென்னை: 2.0 டீசர் வெளியாகும் நேரத்தை ஷங்கர் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படும் திரைப்படம் என புகழ்பெற்ற 2.0 திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது.

எப்போதுமே பிரம்மாண்டமாக இருக்க வேண்டுமென்று எண்ணி காட்சிக்கு காட்சி பிரம்மாண்டத்தை புகுத்த நினைக்கும் இயக்குனர் ஷங்கர், எந்திரன் திரைப்படத்தை விட பல மடங்கு பேசப்பட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் அக்‌ஷை குமாரை வில்லனாகவும், எமி ஜாக்சனை கதாநாயகியாகவும் வைத்து இயக்கியுள்ளார்.

தற்போது 2.0 திரைப்படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு வெளியாகும் என ஷங்கர் ட்வீட் செய்துள்ளார். க்ரோவ் மேனாக அக்‌ஷை குமார் இருப்பது, இரண்டு ரோபோக்களாக ரஜினி, எமி ஜாக்சனும் ரோபோ தோற்றத்தில் உள்ளது போல போஸ்டர்கள் வெளியான நிலையில் டீசரில் என்னென்ன விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

பொதுவாக ரஜினிகாந்த் பட டீசர் என்றாலே வைரலாகும். நாளை விநாயகர் சதுர்த்தி, விடுமுறை நாள் என்பதால் அதைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

இப்போதே பல ரஜினி ரசிகர்கள் அவெஞ்செர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படத்தின் சாதனையை 2.0 டீசர் முறியடிக்கும். அதை செய்வதற்கு நாம் ஒன்றிணைய வேண்டும் என ட்வீட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

நாளை ரிலீஸ் ஆகும், சீமராஜா, யூ டேர்ன் திரைப்படங்களைக் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் திரையரங்கில் 2.0 டீசரைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். 2.0 டீசர் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Have a great day!
Read more...

English Summary

Director Shankar announced that 2.0 teaser will be releasing 9am tomorrow.