பாடகி விஜயலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது: அடுத்த மாதம் திருமணம்


திருவனந்தபுரம்: பார்வையில்லாத பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி படத்தில் வந்த சொப்பன சுந்தரி நான் தானே பாடலை பாடி தமிழ் திரையுலகில் பிரபலமானவர் பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமி.

பாடல்கள் பாடுவது தவிர காயத்ரி வீணை வாசிப்பதிலும் வல்லவர். தொடர்ந்து 5 மணிநேரம் வீணை வாசித்து சாதனை படைத்துள்ளார்.

நிச்சயதார்த்தம்

வைக்கம் விஜயலட்சுமிக்கும், கேரளாவை சேர்ந்த பலகுரல் கலைஞர் அனூப்புக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விஜயலட்சுமியின் வீட்டில் வைத்து நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள். அவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது.

திருமணம்

விஜயலட்சுமி, அனூப் திருமணம் கேரள மாநிலம் வைக்கமில் உள்ள மகாதேவ் கோவிலில் நடக்க உள்ளது. அனூப், விஜயலட்சுமிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பழக்கம் உள்ளது. இந்நிலையில் அவர்களின் நட்பு காதலாக மாற அதை அவர்கள் வீட்டில் தெரிவித்தனர். பெற்றோரும் அதை புரிந்து கொண்டு அவர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்கிறார்கள்.

இசையமைப்பாளர்

முன்னதாக வைக்கம் விஜயலட்சுமிக்கும், இசையமைப்பாளர் சந்தோஷுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருந்தது. திருமணத் தேதி நெருங்கிய போது விஜயலட்சுமி அதிரடி முடிவு எடுத்தார். திருமணத்தை நிறுத்துவதாக அவர் அறிவிப்பு வெளியிட்டது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

கல்லூரி

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் பாட வேண்டாம். பாடும் வாய்ப்பு வரலாம், வராமலும் போகலாம். அதனால் இசைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்று. அவ்வாறு செய்தால் நிரந்தர வருமானம் வரும் என்று சந்தோஷ் விஜயலட்சுமியிடம் தெரிவித்தார். இதை கேட்ட விஜயலட்சுமி மனமுடைந்து திருமணத்தை நிறுத்திவிட்டார். என் உயிர் இருக்கும் வரை நான் பாடுவேன் என்று அவர் கூறினார். விஜயலட்சுமிக்கு தற்போது நல்ல மாப்பிள்ளை அமைந்துள்ளதை பார்த்து அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Have a great day!
Read more...

English Summary

Singer Vaikom Vijayalakshmi has got engaged to mimicry artist Anoop in Kerala. They are set to get married on october 22.