சென்னை: இந்திய திரைத்துறையில் தனித்துவமான நடிகர் சிவாஜி கணேசன். ஹீரோவாகவும், கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாகவும் விளங்கிய அவர்; கடந்த 2001ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். சூழல் இப்படி இருக்க இன்று அவரது 25வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி அமைச்சர் ராஜ்மோகன், நடிகர் பிரபு ஆகியோர் சிவாஜியின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கமல்ஹாசன் உருக்கத்துடன் ட்வீட் செய்திருக்கிறார்.
கலைஞர் கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான படம் பராசக்தி. அந்தப் படத்தில்தான் சிவாஜி கணேசன் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர்; தொடர்ச்சியாக தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் காரணமாக நடிகர் திலகம் என்றும் புகழப்பட்டார். மேலும் செவாலியே விருதையும் வென்றிருக்கிறார். அவர்தான் இப்போது இருக்கும் நடிகர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார்.
கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்: ஹீரோவாக ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிய அவர்; தனக்கான வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து ஒன்ஸ் மோர், பூப்பறிக்க வருகிறோம், தேவர் மகன், படையப்பா என பல படங்களில் கேரக்டர் ரோலையும் செய்தார். ஹீரோவாக எப்படி சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தினாரோ; அதேபோல் குணசித்திர வேடங்களிலும் கலக்கியிருந்தார். அதேசமயம் அவர் அப்படி நடிக்கும்போது புதிய சிவாஜியை பார்க்கும் வாய்ப்பு அனைவருக்குமே அமைந்தது.
உயிரிழந்த சிவாஜி கணேசன்: சூழல் இப்படி இருக்க உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவாஜி கணேசன்; கடந்த 2001ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறைக்குமே பேரிழப்பாக கருதப்பட்டது. அனைவரும் ஒன்று திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து அவர் திரைத்துறையினரால் கௌரவிக்கபப்ட்டும், நினைவுகூரப்பட்டும்வருகிறார். சூழல் இப்படி இருக்க இன்று அவரது 25வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
மரியாதை செலுத்திய அமைச்சர்: இதனையொட்டி சென்னையில் இருக்கும் சிவாஜி நினைவிடத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன், நடிகரும், சிவாஜியின் மகனுமான பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சிவாஜியின் 100வது பிறந்தநாளை முன்நின்று நடத்திதர முதலமைச்சர் விஜய் உறுதியளித்திருப்பதாகவும் தெரிவித்தார். இவர்கள் தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் பலரும் இன்று சிவாஜிக்கு தங்கள் மரியாதையை செலுத்திவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பிலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கமலின் ட்வீட்: இந்நிலையில் சிவாஜியின் நினைவு தினத்தையொட்டி கமல்ஹாசன் தன் எக்ஸ் பக்கத்தில், "மறந்தாலன்றோ நினைப்பதற்கு என்ற கருத்து இருப்பினும், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் நினைவு நாளான இன்று அவர் குறித்த நினைவுகள் கூடுதலாகத்தான் மனதில் வரும்" என குறிப்பிட்டிருக்கிறார். சிவாஜி உயிரோடு இருந்தவரை அவரும் கமல்ஹாசனும் ரொம்பவே நெருக்கமாக இருந்தார்கள். இப்போதுவரை சிவாஜி குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார் கமல்.
More Articles
- தாய்மாமனான விக்ரம் பிரபு.. ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதிக்கு ஆண் குழந்தை.. மொத்த ஃபேமிலியும் ஹேப்பி
- ஹீரோயினுக்கு குளிர் காய்ச்சல் வந்தால்.. சிவாஜி முதல் அமிதாப் வரை.. ரொம்ப வொர்ஸ்ட்!
- பெரியாராக நடிப்பது மட்டுமல்ல.. இன்னொரு நிறைவேறாத ஆசையுடன் மறைந்த பராசக்தி ஹீரோ!
- சிவாஜி மீது அதீத காதல்.. படத்திற்காக கட்டிய தாலி.. மானசீக கணவராக நினைத்த நடிகையின் கதை!
- ஜால்ரா பயலுகளா ஓடிப்போங்க.. ரஜினிக்காக சண்டைக்கு சென்ற சிவாஜி கணேசன்.. இப்படியும் நடந்திருக்கா?
- டேய் நான் தொவச்சுடுவேன்.. ராதா ரவியிடம் சிவாஜி ஏன் இப்படி சொன்னாரு தெரியுமா?