சென்னை: சர்வதேச கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி அர்ஜென்டினா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக கோப்பையை தட்டி தூக்கியிருக்கிறது. இந்நிலையில் அந்த அணியின் வெற்றிக்கும், தவெகவின் கட்சி கொடிக்கும் சோஷியல் மீடியாவில் விர்ச்சுவல் வாரியர்ஸ் முடிச்சு போட தொடங்கியிருக்கிறார்கள்.
கால்பந்துக்கென்று உலகம் முழுவதும் ரசிகர்களாக இருக்கிறார்கள். பல நாடுகளில் அதனை வெறித்தனமாக ரசிப்பவர்கள் உண்டு. மேலும், அரசியல் அரங்கத்தில் கொடுக்க முடியாத பதிலடிகளுக்கு; பெரும்பாலான நாடுகள் கால்பந்து மைதானத்தைத்தான் தேர்ந்தெடுக்கும். சமீபத்தில் இங்கிலாந்துடனான அரையிறுதி போட்டியை வென்ற பிறகுகூட அர்ஜென்டினா அணி; ஃபாக்லாந்து தீவுகள் பிரச்னை தொடர்பாக பதாகையை ஏந்தியது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டி: இப்படி உணர்வோடு கலந்திருக்கும் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நேற்று நியூ ஜெர்ஸியில் இருக்கும் மைதானத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கியது. கால்பந்தின் GOAT என புகழப்படும் மெஸ்ஸியும், வளர்ந்து வரும் GOAT என புகழப்படும் ஸ்பெயினின் லமீன் யமாலும் நேருக்கு நேர் மோதினார்கள். இதனா இப்போட்டியின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து: ஆட்டம் தொடங்கியதிலிருந்தே முழு கட்டுப்பாட்டையும் ஸ்பெயின் அணி எடுத்துக்கொண்டது. இந்தத் தொடரில் பெல்ஜியம் அணிக்கு எதிராக மட்டும்தான் அந்த அணி கோல் வாங்கியிருக்கிறது. எனவே பலமான தடுப்புகளை கொண்ட அணி என்ற பெயரோடு அது களமிறங்கியது. மறுபக்கம் அர்ஜென்டினாவோ இறுதிப்போட்டிக்கு முன்னர் வரை விளையாடிய போட்டிகளில் குறைந்தபட்சம் 2 கோல்களை அடித்திருந்தது. எனவே அட்டாக்கிங் டீம் என்ற பெயரோடு அது களமிறங்கியது.
இருப்பினும் மெஸ்ஸி மற்றும் அர்ஜென்டினா அணி வீரர்களின் மேஜிக் எதுவும் ஸ்பெயினிடம் எடுபடவில்லை. 900 பாஸ்களை கம்ப்ளீட் செய்து; பல முறை எதிரணியின் கோல் போஸ்ட்டை முற்றுகையிட்டார்கள் ஸ்பெயின் வீரர்கள். பதிலுக்கு எதுவுமே செய்ய முடியாமல் மெஸ்ஸியும் அவரது சகாக்களும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். இறுதியாக கூடுதல் நேரத்தில் ஒரு கோலை அடித்து ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுவிட்டது.
தவெகவுடன் முடிச்சு: கடைசியாக 2010ஆம் ஆண்டு அந்த அணி கோப்பையை வென்றிருக்கிறது. தற்போது வெற்றி பெற்றிருக்கும் ஸ்பெயினுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் இன்னொரு கூத்தும் அரங்கேற தொடங்கியிருக்கிறது. அதாவது ஸ்பெயின் அணியின் கொடியும், தவெகவின் கொடியும் சிகப்பு, மஞ்சள் நிறத்தால் அமைந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.
அதை கவனித்துவிட்ட விர்ச்சுவல் வாரியர்ஸ் இந்தக் கலரில் கொடி இருக்கும்போது எப்படி வெற்றி பெறாமல் இருப்பார்கள். இதே கலரை வைத்துதான் தமிழ்நாட்டில் அரசியல் GOAT திமுகவை காலி செய்தார் இளம் GOAT விஜய்; அதேபோல் கால்பந்திலும் மூத்த GOAT மெஸ்ஸியை இளம் GOAT லமீன் யமால் காலி செய்துவிட்டார் என்று புதிய தியரியை கண்டுபிடித்து ஜாலியாக பேசிவருகிறார்கள்.
More Articles
- செல்வி அம்மாள் காலில் விழுந்த பாடகர் கிரிஷ்.. ரொம்பவும் எமோஷனல் ஆகிட்டாங்களேப்பா!
- FIFA பார்க்க போன மியா கலிஃபா.. லட்சுமி அம்மாள் கீழ விழுந்ததும் துடிச்சுட்டாங்க
- Ajithkumar: இந்தியாவின் பெருமிகு அடையாளமாக மாறி நிற்கும் அஜித்குமார்.. ஸ்பெயினில் தரமான சம்பவம்!
- Ajithkumar: ஒரே நேரத்துல ரெண்டா.. அஜித்தோட குட் பேட் அக்லி படத்துல டைரக்டர் செய்துவரும் சம்பவம்!
- Actor Ajith: ஸ்பெயினுக்கு பறக்கவிருக்கும் குட் பேட் அக்லி டீம்.. அப்ப ஜப்பான் இல்லையா?
- ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..நயன் – விக்கி ஜோடியின் மாஸ்டர் பிளான்.. அப்போ ஹனிமூன் இல்லையா?