சென்னை: சூர்யா நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 47' திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர்.
'ரொமாஞ்சம்', 'ஆவேஷம்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், முதல் முறையாக சூர்யாவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. ஆக்ஷன், காமெடி மற்றும் எமோஷன் கலந்து உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நஸ்ரியா பஹத் நடித்துள்ளார்.
இந்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில், "It's a wrap for #Suriya47. 👮♂️ See you in theatres with The One. #JithuMadhavan #NazriyaFahadh" என்று பதிவிட்டு படப்பிடிப்பு நிறைவடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஒரு பதிவு ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக முடிந்துள்ளதால், அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் கேள்வி: இதனிடையே, ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகமாக எழுந்துள்ள கேள்வி படத்தின் டைட்டில் குறித்துதான். இதுவரை 'சூர்யா 47' என்ற தற்காலிக பெயரிலேயே அப்டேட்கள் வெளியாகி வரும் நிலையில், சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்ற பேச்சு சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே 'சூர்யா 47' படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அப்டேட்: இப்படி இருக்கையில், படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு முதல் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அடுத்ததாக டைட்டில், ஃபர்ஸ்ட் லுக், டீசர் என அடுத்தடுத்த அப்டேட்கள் வரிசையாக வெளியாகும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வரும் 23ஆம் தேதி சூர்யாவின் 51ஆவது பிறந்த நாள், இந்த பிறந்த நாளில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படமான விஸ்வநாதன் & சன்ஸ் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை சூர்யா தான் பாடியுள்ளார் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவலாக உள்ளது.More Articles