சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருப்பன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படத்திலும், ஜித்து மாதவன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

Advertisement

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. அவர் நேருக்கு நேர் திரைப்படத்தில் அறிமுகமானபோது அவரது நடிப்பு, நடனம் என அனைத்தையுமே ஒரு கூட்டம் கிண்டல் செய்தது. அவரோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் முழுக்க முழுக்க உழைத்தார். இதனால் நந்தா, காக்க காக்க உள்ளிட்ட படங்களின் வாய்ப்பு கிடைக்க; அதனை சரியாக பயன்படுத்தி அந்தப் படங்களில் ஸ்கோர் செய்தார். இரண்டு படங்களும்தான் அவரது கரியரையே மாற்றி வைத்த படங்கள் ஆகும்.

Advertisement

Photo Credit:

மோசமான ட்ரோல்கள்: தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு; கடந்த சில வருடங்களாகவே எதுவுமே சரியில்லை. ரெட்ரோ, கங்குவா ஆகிய படங்கள் மோசமான ட்ரோலை சந்தித்து தோல்வியையும் பெற்றன. தோல்வியடைந்ததை தாண்டி இப்படி ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டதே என நினைத்து அவரது ரசிகர்கள் வேதனைப்பட்டார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்தார் அவர். திரிஷா ஹீரோயினாக நடித்திருந்தார்.

மீண்ட சூர்யா: அந்தப் படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்த சூர்யா; இயக்குநர், கேமரா மேன், இசையமைப்பாளருக்கு விலையுயர்ந்த சொகுசு காரை பரிசாக கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும், பாலாஜியுடன் நல்ல கனெக்ஷன் ஏற்பட்டுவிட்டதால்; அநேகமாக இரண்டு பேரும் சேர்ந்து இன்னொரு படத்தில் பணியாற்றலாம் என்றும் தெரிகிறது.

Advertisement

அடுத்தடுத்த படங்களின் மீது நம்பிக்கை: கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் விஸ்வநாத்&சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வரவிருக்கிறது. இதுவரை படத்திலிருந்து வந்த அப்டேட்டுகள் எல்லாம் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகளவு ஏற்றி வைத்திருக்கிறது. இப்படத்துக்கு ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்திருக்கும் படமும், ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படங்களும் வருகின்றன. கண்டிப்பாக அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்ற உச்சக்கட்ட நம்பிக்கையில் இருக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

Advertisement

சூர்யா பிறந்தநாள்: இந்நிலையில் சூர்யா இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எனவே அவருக்கு பலரும் வாழ்த்து சொல்லிவரும் சூழலில்; அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஒரு படத்துக்கு 45லிருந்து 50 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெற்ற சூர்யா கருப்பு வெற்றியால் அதனை ஏற்றிவிட்டதாக தெரிகிறது. மேலும், சென்னை, மும்பையில் விலையுயர்ந்த சொகுசு வீடுகளை வைத்திருக்கிறார். பல சொகுசு கார்களையும் தன் கலெக்‌ஷனில் வைத்திருக்கிறாராம்.

மொத்த சொத்து மதிப்பு: சூர்யாவுக்கு மட்டும் மொத்தம் 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்கள் இருக்குமாம். அதேசமயம் ஜோதிகாவின் சொத்தையும் சேத்தால் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கும் மேல் செல்லும் என கணிக்கப்பட்டிருக்கின்றன. சினிமாவில் சம்பாதிப்பதை அகரம் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட விஷயங்களுக்காகவும் செலவழிக்கும் சூர்யா; 2டி என்ட்டெர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயார்ப்பு நிறுவனத்தையும் நடத்திவருகிறார். இவை மட்டுமின்றி மேலும் சில தொழில்களிலும் பணத்தை முதலீடு செய்து வருமானத்தை இரட்டிப்பாக பார்த்துவருகிறாராம்.