கரூர்: கரூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற துயரமான கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் முதன்முறையாக அங்கே நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பழியை என் மீது போட்டு, முன்னாள் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார்கள்.

Advertisement

இதில் ஹைலைட் காமெடி என்னவென்றால், சட்டசபையில் நான் பேசும்போது 'பார்ட்டி ஃபண்ட்' என்றுதான் பொதுவாகச் சொன்னேன். அது எந்த பார்ட்டி, என்ன ஃபண்ட், யார் பேரு எதுவுமே நான் குறிப்பிடவில்லை. ஆனால், 'பார்ட்டி ஃபண்ட்' என்று நான் சொன்னவுடனே, அங்கிருந்தவர்கள் எடுத்தாங்க ஓட்டம் பிடித்தார்கள். எனக்கே ஒன்றும் புரியவில்லை, ஏன் எல்லாரும் திடீரென வெளியே ஓடுகிறார்கள், அப்படி நாம் என்ன சொல்லிவிட்டோம் என்று? அதுதான் 'குற்றம் உள்ள நெஞ்சே குறுகுறுக்கும் என்பதா?
இது எப்படி இருக்கிறது தெரியுமா? 'என் அப்பா பீரோக்குள்ள இல்ல.. என் அப்பா பீரோக்குள்ள இல்ல' என்று தானாக முன்வந்து உளறுவது போல இருக்கிறது. இவர்களுடன் செம கூத்தாகவும், செம ஃபன்னாகவும் இருக்கிறது.

Advertisement

தோண்ட தோண்ட ஊழல்: சென்னையில் பாலம் கட்டுவதற்காக, வழக்கமாக ஆகும் செலவை விட டபுள் மடங்கு செலவில் முந்தைய ஆட்சியில் டெண்டர் விட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் இப்போது நாம் தோண்டி எடுத்து, அதிரடியாகக் கேன்சல் செய்திருக்கிறோம். அங்கே எத்தனை கோடி ஊழல், இன்னும் எத்தனை லட்சம் ஊழல் நடந்திருக்கிறது என்று தோண்டத் தோண்ட என்னென்ன வருமோ, அது எங்களுக்கே தெரியவில்லை. இப்போது ஒவ்வொரு முகமூடியாகக் கிழிகிறது. ஐயோ.. இந்த விஜய் ஒவ்வொரு விஷயத்தையும் வெளியே எடுத்து அம்பலப்படுத்திவிடுவானோ என்று அவர்கள் கதறும் கதறல், காதில் இருந்து ரத்தம் வராத குறையாக இருக்கிறது. ஆனால், ஊழலிலேயே ஊறிப்போனவர்கள் இப்படித்தான் பயப்படுவார்கள்.

Advertisement

55 நாள் சாதனை: கடந்த 50, 55 நாட்களில் நான் செய்த விஷயங்களையெல்லாம் ஏற்கனவே சட்டசபையில் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும் சில விஷயங்களை இந்த மேடையில் உங்களிடம் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். இந்த மின்சாரத் துறையில் இதற்கு முன்னால் செய்ய முடியாமல் முடங்கிக் கிடந்த 'பதவி உயர்வு'களை இப்போதுதான் எங்களால் போட முடிந்தது. அரசு அலுவலகத்தில் பல வருடங்களாகத் தேங்கிக் கிடந்த அந்தப் பதவி உயர்வைப் பெற்று, ஒரு அக்கா அழுதுகொண்டே எனக்கு நன்றி சொன்னார்களே.. அந்த வீடியோ எல்லாம் உங்கள் கண்ணில் படவில்லையா? ஊழலை ஒழிக்க முடியாது, அது ரத்தத்திலேயே ஊறிப்போய் இருக்கிறது என்று சொன்னவர்கள் எல்லாம் இப்போது போய் அரசு அலுவலகங்களைப் பாருங்க, ஒரு பைசா லஞ்சம் இல்லை.. ஒரு பைசா கூட லஞ்சம் இல்லை. மக்களுக்கான வேலைகளெல்லாம் சும்மா டக்கு டக்குனு நடக்கிறது என்று முதல்வர் விஜய் பேசி இருக்கிறார்.