நாளை ரஜினி மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்: வயிறு பத்திரம்


சென்னை: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக சூப்பர் ஸ்டார் மட்டும் அல்ல அகில உலக சூப்பர் ஸ்டாரும் வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி நாளான நாளை ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் டீஸர் அதுவும் 3டியில் வெளியாக உள்ளது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சீமராஜா படம் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் தொலைக்காட்சி சேனல்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு படங்கள் ஒளிபரப்புகிறார்கள்.

விஜய் டிவி

தமிழ் படம் 2

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் டிவியில் அகில உலக சூப்பர் சிவா நடிப்பில் வெளியாகி ஹிட்டான தமிழ் படம் 2 ஒளிபரப்பப்படுகிறது. அதுவும் சன் டிவியில் குலேபகாவலி ஓடும் அதே 11 மணிக்கு. இதை பார்ப்பதா, அதை பார்ப்பதா என்று மக்கள் குழம்ப வேண்டாமா?. இதற்கிடையே மின் வெட்டு இல்லாமல் இருக்க வேண்டும். டிவியில் ஏதாவது புதுப்படம் போட்டாலே மின்வாரிய ஆட்களுக்கு பொறுக்காது. உடனே கரண்ட்டை கட் பண்ணிடுவாங்க.

சிவகார்த்திகேயன்

சீமராஜா

நாளை சன் டிவியில் சிவகார்த்திகேயனின் சீமராஜா நிகழ்ச்சி மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் சிவகார்த்திகேயன், சூரி, சிம்ரன் உள்ளிட்ட சீமராஜா படக்குழு கலந்து கொள்கிறது. சூரியின் தீவிர ரசிகை ஒருவர் மேடைக்கு வந்து அவரை கட்டிப்பிடிப்பது போன்று காட்டியுள்ளனர். இப்படி ஒரு ரசிகையா, சொல்லவே இல்லை.

விக்ரம்

சாமி ஸ்கொயர்

விஜய் டிவியில் சாமி ஸ்கொயர் படக்குழு கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நாளை ஒளிபரப்பாகிறது. டிடி நடத்தும் அந்த நிகழ்ச்சியில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரி ஆகியோர் கலந்து கொண்டு ஜாலியாக பேசுகிறார்கள்.

Have a great day!
Read more...

English Summary

Siva starrer Tamizh Padam 2 will be shown in Vijay TV tomorrow as part of Vinayakar Chaturthi celebration.