சென்னை : சினிமா பிரியர்களுக்கு வெள்ளிக்கிழமை வந்தாலே செம மகிழ்ச்சி தான். அதற்கு காரணம் தியேட்டரில் வரிசையாக படம் வெளியாகும். அந்த படத்தை பார்ப்பது, விமர்சனம் கொடுப்பது, மார்க் போடுவது என பிஸியாகி விடுவார்கள். அந்த வகையில் கடந்த வாரம் அதர்வாவின் இதயம் முரளி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து வெள்ளிக்கிழமையான நாளை ஜூலை 17ந் தேதி என்னென்ன படங்கள் வெளியாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

Advertisement

Photo Credit:

தி ஒடிஸி: கிறிஸ்டோபர் நோலன் இயக்கும் 13வது திரைப்படமான 'தி ஒடிசி'. கிரேக்கக் கவிஞர் ஹோமரின் புகழ்பெற்ற 'ஒடிசி' காவியத்தை மையமாக கொண்டு இப்படத்தை இயக்கி உள்ளார். கதையின் நாயகன் ஒடிசியஸ் ஆக நடிகர் மேட் டாமன் மிரட்டியுள்ளார். மேலும் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ராபர்ட் பாட்டின்சன் மற்றும் ஜெண்டாயா போன்ற மிகப்பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

Advertisement

அன்பே டயானா: ஜமா திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் அன்பே டயானா. இந்த திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி மற்றும் செல் முருகன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் வெகுவாக படத்தை பாராட்டி வருவதால், இந்த படம் நிச்சயம் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Credit:

அருள்வான்: நடிகர் அருள்நிதி நடிப்பில் நாளை ஜூலை 17ந் தேதி வெளியாக இருக்கும் படம் அருள்வான். இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆரவ், ரம்யா பாண்டியன், பருத்திவீரன் சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிக்காக போராடிக்கொண்டிருக்கும், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

அர்ஜூனன் பேர் பத்து: நடிகர் யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. ராஜ் மோகன் இயக்கி உள்ள இந்த படத்தில் யோகி பாபுவிற்கு ஜோடியாக அனாமிகா மஹி நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், லெனின் பாரதி உள்ளிட்டோர் நடத்துள்ளனர். இப்படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது.

ஓ சுகுமாரி: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷனின் இயக்கத்தில் 'ஓ சுகுமாரி' படத்தில் நடித்து வருகிறார். நடிகர் திருவீர் நாயகனாக நடிக்கிறார். இப்படம் நாளை தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் ஜான்சி, ஆமணி, முரளிதர் , ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.