சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். கடந்த சில வருடங்களாகவே அவர் நடிப்பில் மட்டும்தான் கவனம் செலுத்திவந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இயக்குநராக ட்ரெய்ன் படத்தின் மூலம் என்ட்ரி தந்திருக்கிறார். இன்று படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு; அதன்படி டீசர் வெளியிடப்பட்டது. அது ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

Advertisement

இயக்குநர் மிஷ்கினுக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விஷயத்தை புதிய கோணத்தில் பேசியவை. முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு; எதற்காகவும், யாருக்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல் அதிலேயே பயணிப்பது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை. மிஷ்கின் அதை தவறாமல் பிடிவாதமாக செய்துவருகிறார். ஒரு படைப்பாளிக்குரிய அத்தனை நேர்மையும் அவரிடம் இருப்பதால்தான் அவரால் இப்படி இருக்க முடிகிறது.

Advertisement

Photo Credit:

இயக்கத்தில் இருந்தாலும் நடிப்பு: இயக்கத்தில் முழுதாக இருந்தபோதே ஹீரோவாகிவிட்டார் மிஷ்கின். நந்தலாலா திரைப்படத்தை இயக்கி நடித்தார். அது வணிக ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. மிஷ்கினின் இயக்கத்தில் எப்படியோ அதேபோல் நடிப்பிலும் அசத்துகிறார் என்ற பெயரை அப்படத்தில் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படத்திலும் ஹீரோவாக கலக்கினார்.

இப்போது ஓவர் பிஸி: அந்த நடிப்பின் தொடர்ச்சி இப்போது முழு வேகத்தில் செல்கிறது. கடந்த சில வருடங்களாகவே இயக்கத்தை முழுக்க முழுக்க ஓரங்கட்டிவிட்டு நடிக்க மட்டும் செய்தார். இருப்பினும், மிஷ்கின் போன்ற இயக்குநர்கள் படம் செய்யாமல் இருப்பது; கலைக்கு நல்லது இல்லை என்று பலர் தொடர்ந்து கூற; அவரும் மீண்டும் இயக்குவதற்கு வந்திருக்கிறார். அந்தவகையில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க; ட்ரெய்ன் திரைப்படம் உருவாக தொடங்கிவிட்டது.

Advertisement

வெளியான டீசர்: இதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க; ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். முதன்முறையாக சேதுவும், மிஷ்கினும் சேர்ந்திருப்பதாலும், மிஷ்கின் நீண்ட காலம் கழித்து இயக்கும் திரைப்படம் என்பதாலும் இதன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அவரும் விடாமல் ஷூட்டிங்கை நடத்தி தற்போது இறுதிக்கட்ட பணிகளில் மூழ்கியிருக்கிறார். இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

எப்படி இருக்கு டீசர்?: டீசரை பொறுத்தவரையில் வழக்கமான மிஷ்கின் ஷாட்டுகள் கொஞ்சம் இருந்தாலும்; முழுக்க இல்லை. பரபரவென்று வசனமே இல்லாமல் ஃபாஸ்ட் கட்டில் ட்ரெய்லர் போவது; படமும் இப்படிப்பட்ட டோனில்தான் இருக்கும் என்பதை உணர்த்துவதாகவே தோன்றுகிறது. விஜய் சேதுபதியின் கெட்டப்பும், மிஷ்கினின் இயக்கமும் இதில் பெரிதாக பேசப்படும் என்பதை இந்த டீசர் உறுதியாக சொல்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.