சென்னை: இந்திய திரையிசையின் நைட்டிங்கேள் என்று கொண்டாடப்பட்ட பாடகி ஜானகி அம்மா ஜூலை 11அம் தேதி வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். மொத்த திரையுலகமும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 96 படத்தின் போது ஜானகி அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, தனது இரங்கலை மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

Advertisement

நடிகை த்ரிஷாவின் பதிவில், " எனது மிகச் சிறந்த படங்களில் ஒன்றில் உங்களது பெயரை எனது கதாபாத்திரத்தின் பெயராக நான் கொண்டிருப்பதை எனது வாழ்நாள் கௌரவமாக கருதுவேன். ஆனால் அதைவிட உங்களுக்கு என்னைத் தெரியும் என்பதும், என் மீது நீங்கள் அன்பு செலுத்தினீர்கள் என்பது எனது வாழ்நாளுக்கும் நான் போற்றிப் பாதுகாக்கும் நினைவுகள்.

Advertisement

த்ரிஷா எமோஷனல்: உங்களின் அரவணைப்பு, அன்பு, சிரிப்பு என எல்லாவற்றையும் கடந்து சிறந்த கலைஞர்கள் எப்போதும் எளிமையாகவே இருப்பார்கள் என்று உணர்த்தியவர் நீங்கள். அதை என்றைக்கும் மறக்க மாட்டேன், அதற்காக நன்றிகளும். உங்கள் குரல் என்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று மிகவும் எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.

96இல் ஜானகி: இவரது இந்த பதிவுடன், 96 படத்தின் படப்பிடிப்பின் போது மிகவும் வாஞ்சையாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இரண்டைப் பகிர்ந்து கொண்டார். இந்த இரண்டு புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், 96 படத்தில் ஜானகி அம்மாள் ஒரு காட்சியில் நடித்திருப்பார். ஆனால் அந்தக் காட்சியை படத்தின் நீளம் கருதி இயக்குநர் பிரேம் அந்த காட்சியை நீக்கி விட்டார்.

Advertisement

எதிர்பார்ப்பு: படம் வெளியாகி சில ஆண்டுகளுக்குப் பின்னர் படத்தின் டெலிடேட் காட்சி என்று ஜானகி அம்மாள் நடித்த காட்சி வெளியானது. அப்போது பலரும் இயக்குநர் பிரேமை மிகவும் காட்டமாக விமர்சித்தனர். வயதான காலத்தில் அவரை படத்தில் நடிக்க வைத்துவிட்டு, ஏன் அந்த காட்சியை நீக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பினர். தற்போது 96 படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளும் நடைபெற்று வருவதால், இரண்டாம் பாகத்தில் அந்தக் காட்சியை எப்படியாவது இடம்பெறச் செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.