சென்னை: 2024 ஆம் அண்டுக்கான 72வழ தேசிய விருதுகள் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர், ராயன்' மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் பிரபல 'வலைப்பேச்சு' யூடியூப் தளத்தில், இந்த விருதுத் தேர்வை கடுமையாக விமர்சித்து பேசிய பிஸ்மி, கேப்டன் மில்லர் படத்திற்கு தனுஷிற்குச் சிறந்த நடிகர் விருது கொடுத்ததைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அப்படத்திற்கு தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் சிறந்த படம் என்ற பிரிவில் விருது கொடுத்து இருக்கிறார்கள். கேப்டன் மில்லர் படத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன சம்பந்தம் என்றே தெரியவில்லை.

Advertisement

கேப்டன் மில்லருக்குவிருது: அந்தப் படத்தின் கதையிலோ, காட்சிகளிலோ, வசனங்களிலோ அப்படி எதுவும் இல்லையே. சொல்லப்போனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த இடங்களில் எல்லாம் குண்டு வெடிக்க வைத்து, சுற்றுச்சூழல் பஞ்சாயத்தாகி, சூட்டிங் நிறுத்தப்பட்டு, அபராதம் கட்டித் தான் படமே வெளியானது. அப்படிப்பட்ட படத்திற்குப் போய் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விருதைக் கொடுத்தால் வாங்கும் போது கூச்சமாக இருக்காதா?

வலைப்பேச்சு டீம்: 2024-ஆம் ஆண்டில் மாரி செல்வராஜின் வாழை, பா.ரஞ்சித்தின் தங்கலான், ஜமா, லப்பர் பந்து, விஜய் சேதுபதியின் மகாராஜா என பல படங்கள் வந்தன. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறான அமரன் படத்திற்குச் சிறந்த படத்திற்கான விருது வாங்கும் தகுதி இல்லையா? அமரன் படத்திற்கு விருது கொடுக்கவில்லை என்றால் பிரச்சனையாகிவிடும் என்று வேறு ஏதோ ஒரு கேட்டகிரியில் விருது கொடுத்துச் சமாளித்துள்ளனர். அமரன் படத்தின் இயக்குநருக்கு ராஜ்குமார் பெரியசாமி 'சிறந்த இயக்குநர்' விருது கொடுத்துவிட்டு, அந்தப் படத்திற்குச் சிறந்த படம் விருது கொடுக்கவில்லை என்றால் என்ன அர்த்தம்? ஒரு சிறந்த படத்தை எடுத்தவர் தானே சிறந்த இயக்குநராக இருக்க முடியும்? ஜூரிகளுக்கெல்லாம் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை.

Advertisement

புஷ்பா 2க்கு விருது: இதையெல்லாம் விட மிகப்பெரிய கூத்து 'புஷ்பா 2' விருது கொடுத்து இருக்கிறார்கள். செம்மரக் கடத்தல் செய்யும் ஒரு கிரிமினல், தன் கடமையைச் செய்யும் போலீஸ்காரர்களை எல்லாம் கொன்று குவிப்பார்... இதுதான் புஷ்பா 2 கதை. ஒரு கிரிமினல் போலீஸைக் கொல்வது எப்படி சிறந்த திரைக்கதையாகத் தெரியும் என்று எனக்கு புரியவில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லனும் கோயிலுக்கு நேர்ந்துவிட்ட ஆடு அங்கேயும் இங்கேயும் திரியும், அதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்க, அதுபோலத் தான் இப்போது தேசிய விருது அறிவிப்பும் இருக்கு என்று தேசிய விருது நடுவர் குழுவை அநியாயத்திற்கு வெளுத்து வாங்கியுள்ளனர். வலைப்பேச்சு டீமின் இந்த அனல் பறக்கும் பேச்சு தான் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.