சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்று ஒருவழியாக தியேட்டர்களில் ரிலீஸாகிவிட்டது. அவரது ரசிகர்கள் எல்லாம் உச்சக்கட்ட உற்சாகத்தோடு தியேட்டர்களுக்கு படையெடுத்து சென்று பார்த்தார்கள். அவர்களுக்கு படம் ஓரளவு பிடிக்கவே செய்திருக்கிறது. இந்நிலையில் அப்படம் முதல் நாளான நேற்று செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஹெச்.வினோத் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதம் ரிலீஸாக வேண்டியிருந்த படம்; சென்சார் சான்றிதழ் கிடைக்காததன் காரணமாக தள்ளிப்போனது. பிறகு பல பிரச்னைகளை பார்த்துவிட்டது. ஒருகட்டத்தில் படமே லீக்காகி அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. சூழல் இப்படி இருக்க ஒருவழியாக சில வாரங்களுக்கு முன்பு சென்சார் அதிகாரிகள் ஏ சான்றிதழ் கொடுத்தார்கள். எனவே ஜூலை 23ஆம் தேதி ரிலீஸுக்கு நாள் குறிக்கப்பட்டது.
ஒன் லாஸ்ட் டான்ஸ்: இதுதான் விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதனை One Last Dance என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள் தளபதி ரசிகர்கள். இத்தனை வருடங்களாக தங்களை மகிழ்வித்தவரை கடைசி ஒரு முறை தியேட்டரில் பார்ப்பதற்காக எமோஷனலோடு சென்றிருந்தார்கள். அமைச்சர்கள்,ரசிகர்கள் என பலரும் விஜய்யை ஸ்க்ரீனில் பார்த்து தேம்பி தேம்பி அழுதார்கள். ஆனால் கெடுவாய்ப்பாக அதை பார்த்து யாரும் பரிதாபப்படவில்லை; மாறாக பெரும்பாலானோர் ட்ரோலே செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கு படம்?: நேற்று படம் பார்த்த ரசிகர்களுக்கு ஓரளவு திருப்தியே கிடைத்திருக்கிறது. பகவந்த் கேசரி ரீமேக்தான் இந்தப் படம் என்றாலும்; முழுக்க முழுக்க அப்படியே தமிழ் வடிவமாக வினோத் எடுத்து வைக்கவில்லை. தன்னுடைய ஸ்டைலிலும், விஜய்க்கு தேவையான மாஸ் மொமன்ட்ஸ்களையும் சேர்த்து வைத்தே படத்தை கொடுத்திருக்கிறார். அது தளபதியின் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும்; பொதுவான ரசிகர்கள் படம் பார்த்து கொட்டாவி விட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆக, இப்படம் விஜய்யின் ரசிகர்களுக்கு மாஸ்டர் பீஸ்; மற்றவர்களுக்கு சுமார் பீஸ் என்ற பெயரை பெற்றிருக்கிறது.
அடிபொலி விஜய்: படத்தின் ப்ளஸ் சந்தேகமே இல்லாமல் விஜய்தான். ஆக்ஷன் காட்சிகள், மமிதா பைஜூவுடனான உணர்வுப்பூர்வமான காட்சிகள், காவல் துறை அதிகாரியாக வரும் காட்சிகள் என அத்தனையிலும் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸில் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். உண்மையில் இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்படுகையில்; அவரை பிடிக்காதவர்கள்கூட கொஞ்சம் டல்லாகத்தான் செய்தார்கள். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த விவரங்களை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
ஜனநாயகன் வசூல்: அந்த இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி நேற்று 13,067 காட்சிகள் திரையிடப்பட்டனவாம். அவற்றில் இந்தியாவில் மட்டும் 48.27 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாகவும், மற்ற நாடுகளில் 30 கோடி ரூபாயும் என; மொத்தம் 78.27 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. படத்துக்கு எக்கச்சக்க ஹைப் இருப்பதன் காரணமாகவும், வார இறுதி என்பதாலும் கண்டிப்பாக இன்னும் பெரிய வசூலை எடுக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இன்றே அந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிடும்; ஆகமொத்தம் பாக்ஸ் ஆஃபிஸில் பெரிய சாதனையை படைக்கப்போவதாகவும் கருத்துக்கள் எழுந்திருக்கின்றன.
More Articles
- Jana Nayagan: நண்பனின் கடைசி படம்.. FDFS பார்த்த த்ரிஷா.. விசில் அடிச்சு கொண்டாடியிருப்பாங்களே!
- ஜன நாயகன் FDFS அதிக விலைக்கு விற்கப்பட்டதா?.. பதறிப்போன பிரபல தியேட்டர் ஓனர்.. ஓபனா சொல்லிட்டாரே!
- Jana Nayagan Negatives: ஏகப்பட்ட காட்சிகள்.. ஓவர் செலவு.. ஆனால், பெருசா எதுவுமே மனசுல ஒட்டலையே.. ஏன்?
- Jana Nayagan Positives: முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன்.. எச். வினோத் செய்த தரமான சம்பவம்.. அரசியல்!
- Jana Nayagan Review: ஜன நாயகன்னு சொல்லி கிச்சடி செஞ்சு வச்சுருக்காங்க.. பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்
- Jana Nayagan Review: ஜன நாயகன் விமர்சனம்.. பகவந்த் கேசரியை விட பக்காவா? பரவாயில்லையா?