சென்னை: முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விஜய்; தன் சக்திக்குட்பட்டு வேலைகளை செய்துவருகிறார். சூழல் இப்படி இருக்க நடிகரும், விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான சஞ்சீவ்; தங்களுடைய கல்லூரி காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்திருந்தார். ஆனால் அவர் மிகைப்படுத்தி பொய் சொல்லிவிட்டார் என்று சோஷியல் மீடியாவில் ட்ரோல்கள் பறந்துவருகின்றன.
நடிகர் மற்றும் முதலமைச்சர் விஜய்க்கு நட்பு வட்டம் ரொம்பவே சுருக்கமானது. அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள்தான் ஸ்ரீநாத்தும், சஞ்சீவ்வும். ஸ்ரீநாத் இப்போது அமைச்சராகிவிட்டார். சஞ்சீவ் சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடிகராக ஜொலித்துவருகிறார். அவர் நடிகை ப்ரீத்தியை காதலித்து திருமணமும் செய்துகொண்டு இப்போது சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்.
விஜய்க்கு ரொம்ப நெருக்கம்: சஞ்சீவ்வின் பாடி லாங்குவேஜ், நடிப்பு எல்லாம் அப்படியே விஜய் மாதிரி இருக்கும் என்ற விமர்சனங்களும், கிண்டல்களும்கூட எழுந்தது உண்டு. ஏன் விஜய்யேகூட, 'நான் வருடத்துக்கு ஒரு படத்தில்தான் நடிக்கிறேன். நீ அனைத்திலும் என்னை மாதிரியே நடிக்கிறாய்' என சொல்லியதுண்டு. மேலும், அவரை குட்டி பகவதி என்றும் நெட்டிசன்கள் கலாய்ப்பது உண்டு. தன்னை சுற்றி அந்த மாதிரியான விமர்சனங்கள் வந்தாலும்; சஞ்சீவ் அதை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.
சஞ்சீவ்வின் பேட்டி: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் சஞ்சீவ். அந்தப் பேட்டியில் அவர், "நாங்கள் காலேஜ் படிக்கும்போது வட இந்தியாவுக்கு டூர் சென்றோம். அப்போது 60, 70 பேர் கையில் உருட்டு கட்டையோடு வந்தார்கள். எங்களோடு உடன் படிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் வந்து எல்லோரையும் அடிக்க தொடங்கிவிட்டார்கள். விஜய் அப்பர் பெர்த்தில் படுத்திருந்தார்.
விஜய் வைத்த கிக்: அதை பார்த்த விஜய், இரண்டு பெர்த்துகளிலும் கைகளை வைத்துக்கொண்டு ஒரு உதை உதைத்தார். உதை வாங்கியவன் அங்கே போய் விழுந்தான். அந்த கேப்பில் நாங்கள் ஓடிவிட்டோம். அடுத்த ஸ்டேஷனில் காவல் துறை வந்துவிட்டது" என்றிருந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டானது.
விஜய் சொன்னது: ஆனால் இதே சம்பவம் குறித்து விஜய் ஒரு பேட்டியில் வேறு மாதிரி சொல்லியிருக்கிறார். அவர் கொடுத்திருந்த பேட்டியில், "கல்லூரி படிக்கும்போது டூர் சென்றிருந்தோம். ட்ரெய்னில் இரண்டு பேர் தேவையில்லாமல் என் வகுப்பு பெண்களை கிண்டல் செய்தார்கள். நாங்கள் பத்து பேர் இருந்தோம். அவர்களை சாத்திவிட்டோம். ஆனால் அடுத்த ஸ்டேஷனில் அவர்கள் 40 பேர் வந்து எங்களை கீறி பெரிய தகராறே நடந்தது. நிறைய நண்பர்கள் கட்டெல்லாம் போட்டுவிட்டு சென்னைக்கு வந்து இறங்கினார்கள்" என்றிருக்கிறார்.
ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்: இப்போது இந்த இரண்டு வீடியோக்களையும் கம்ப்பேர் செய்து சஞ்சீவ்வை ஓட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். அதாவது விஜய்யே, முதலில் இரண்டு பேர்தான் வந்தார்கள்; பிறகு 40 பேர் வந்து எங்களை தாக்கிவிட்டார்கள் என சொல்கிறார். ஆனால் சஞ்சீவ்வோ அதையே மிகைப்படுத்தி 60லிருந்து 70 பேரை விஜய் ஒற்றை ஆளாக எதிர்கொண்டார் என்கிற தொனியில் பொய்யாக சொல்லியிருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.
More Articles
- Jana Nayagan Second Single - ஜனநாயகன் இரண்டாவது சிங்கிள்.. டைட்டிலில் சி.எம் விஜய்.. பாட்டு சூப்பர்
- எக்ஸ்ட்ரா 10 ரூபாய்னு வீடியோ போடுறீங்களே.. எந்த கொம்பானலும் ஆட்சியை கவுக்க முடியாது.. கூல் சுரேஷ்
- Jason Sanjay: பெற்றோர்கள் கொடுத்த பாசிட்டிவ் வைப்.. ஹீரோவா நடிக்கப் போறேனே?.. ஜேசன் சஞ்சய் ஓபன்!
- கணவருடன் முதலமைச்சர் விஜய்யை சந்தித்த சர்கார் வில்லி.. ரியல் சர்காரே அமைச்சிட்டாரே!
- தியேட்டர்ல நீங்க பார்க்கப் போறது லீக்கான ஜன நாயகனே இல்லையா?.. தயாரிப்பாளர் சொன்ன செம ட்விஸ்ட்!
- அன்பே டயானாவில் CM விஜய்க்கு சொன்ன நன்றியை பாருங்க.. அட நம்ம மனசுல இருக்கறதை அப்படியே சொல்லிட்டாங்க