சென்னை: விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து அவரே தயாரித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. செல்லா அய்யாவு இயக்கியிருக்கும் இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், கருணாஸ், முனீஸ்காந்த், ரம்யா கிருஷ்ணன், மோக்ஷா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் ஆறு நாட்களில் படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. எனவே இந்தப் படத்தின் மீதும் பலருக்கும் எதிர்பார்ப்பு இருந்தது. ஐஸ்வர்யா லட்சுமிதான் இதிலும் ஹீரோயின். ஷான் ரோல்டன் இசையமைக்க; ரம்யா கிருஷ்ணன், மோக்ஷா, குழந்தை நட்சத்திரம் சாரா உள்ளிட்டோர் முக்கியமான வேடங்களை ஏற்றிருக்கிறார்கள்.
படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்: படம் தியேட்டர்களில் ரிலீஸாவதற்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதில், பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தன.கண்டிப்பாக முதல் பாகம் போன்றே இதுவும் பெரிய வெற்றி பெறும் எனவும் அவர்கள் அடித்து கூறினார்கள். ஒரு இடத்தில் படம் பாஸ் ஆகிவிட்டாலும்; மக்களிடம் செல்லும்போதுதான் உண்மையான ரிசல்ட் கிடைக்கும் என்பதால்; அந்த முடிவையும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள் படக்குழுவினர்.
மக்களிடமும் வரவேற்பு: அதன்படி சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் படம் வெளியானது. எதிர்பார்த்தபடியே மக்களிடமும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்துவிட்டது. குடும்பங்கள் கொண்டாடும் காட்சிகள் படத்தில் பல இருப்பதால் அனைவருமே தியேட்டருக்கு படையெடுத்து செல்கிறார்கள். இதுவரை படம் பார்த்த யாருமே தங்களுக்கு படம் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை. இதனால் படம் கண்டிப்பாக ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த்துவிட்டது என்பது உறுதியாகிவிட்டது.
கலக்கிய சாரா: படத்தில் ஏகப்பட்ட ப்ளஸ்ஸுகள் இருக்கின்றன. இயக்குநரின் மேக்கிங், ஐஸ்வர்யா லட்சுமி, விஷ்ணு விஷாலின் நடிப்பு என அனைத்தையும் தாண்டி; குழந்தை நட்சத்திரம் சாராதான் ஷோ ஸ்டீலராக மாறியிருக்கிறார். அவர் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் அவ்வளவு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். நிச்சயம் சாராவுக்கு எதிர்காலங்களில் சினிமாவில் பெரிய இடம் காத்திருக்கிறது என இப்போதிருந்தே ஆரூடமும் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.
வசூல் நிலவரம்: இப்படி விமர்சன ரீதியாக படம் ஹிட்டடித்துவிட்டது. இருப்பினும் ஒரு படத்துக்கு வணிக ரீதியான வெற்றியும் மிக மிக முக்கியம். அந்த ஏரியாவிலும் கட்டா குஸ்தி 2 பாஸ் ஆகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். முதல் ஐந்து நாட்களில் சரமாரியாக வசூலை குவித்த அந்தப் படம்; ஒரு நாளைக்கு சராசரியாக 2 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருந்ததாக Sacnilk இணையதளம் கூறுகிறது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று அப்படம் செய்திருக்கும் வசூல் விவரங்களை அந்த தளம் கூறியிருக்கிறது.
ஆறாவது நாள் வசூல் விவரங்கள்: தன்படி நேற்று இப்படம் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். ஐந்தாவது நாளை ஒப்பிடுகையில் இது குறைவான வசூல்தான். இருப்பினும் ஆறு நாட்களில் அந்தப் படம் இந்தியாவில் மட்டும் 20.35 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தெரிகிறது.
More Articles
- Gatta Kusthi 2 Day 5 Box Office - கட்டா குஸ்தி 2 ஐந்தாவது நாள் வசூல் தெரியுமா?.. பாக்ஸ் ஆஃபிஸ் சூப்பர்
- கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர் முடியைக் காணோம்னு ரகளை செய்த ரசிகர்.. கொஞ்ச நேரத்தில் ஷாக் ஆன படக்குழு!
- Gatta Kusthi 2 Day 4 Box Office - கட்டா குஸ்தி 2 நான்காவது நாள் வசூல் என்ன?.. பாக்ஸ் ஆஃபிஸ் சம்பவம்
- Gatta Kusthi 2: விஜய் ரசிகர்கள் அட்டாக் செஞ்சாங்க.. ஆனால் அது நல்லதுக்கில்லை.. விஷ்ணு விஷால் பளிச்
- Gatta Kusthi 2 Box Office: நெகடிவ் விமர்சனம் ஒர்க் ஆகல.. கட்டா குஸ்தி 2 அதிகாரப்பூர்வ வசூலைப் பாருங்க
- Aishwarya Lekshmi: அழகும்.. அறிவும் இருக்குற அற்புதமான நடிகை.. நிஜமாவே சம்பவக்காரி ஐஸ்வர்யா லட்சுமி!