சென்னை: பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் நீட் முறைகேடுக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் அமீர் ஜன நாயகன் படத்துக்கு எதிராக பேசியதற்கு ஆதரவு அளித்த போராட்டக்காரர்கள் ஜன நாயகன் படத்தை பார்த்து விட்டு போராட்டத்துக்கு வந்துள்ளேன் என சனம் ஷெட்டி பேசியதும் அவரை பேச விடாமல் தடுத்து மைக்கை பிடுங்கி வெளியே அனுப்பிய நிலையில், சனம் ஷெட்டி பத்திரிகையாளர்களை சந்தித்து தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
ஜன நாயகன் படத்தை பார்த்தவர்களை எப்படி ஜோக்கர் என சொல்லலாம் என்றும் நானும் தான் அந்த படத்தை பார்த்து விட்டேன் அப்போ நான் ஜோக்கரா என கேள்வி எழுப்பினார்.
மேலும், இங்கே வந்து பேசிய வெற்றிமாறன் சார் ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளாரே அவரும் ஜோக்கரா? என இயக்குநர் வெற்றிமாறனையும் இழுத்து விட்டுப் பேசிய நிலையில், சனம் ஷெட்டிக்கு எதிராக வெற்றிமாறன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திட்டி தீர்த்து வருகின்றனர். போலி போராட்டம்: டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்துக்கும் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக்கின் காலில் விழுந்துக் கூட நன்றி தெரிவிப்பேன். ஆனால், இங்கே நடப்பது ஒரு அஜெண்டாவுடன் நடக்கும் போலி போராட்டம் என தன்னை தொடர்ந்து பேச விடாமல் போராட்டக்காரர்கள் வெளியே அனுப்பிய நிலையில், பிக் பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி கொந்தளித்துப் பேசியுள்ளார். வெற்றிமாறன் ஜோக்கரா?: நான் போராடும் மாணவர்களுக்காகத்தான் பேச வந்தேன். ஜன நாயகன் படம் பார்க்கிறவர்கள் எல்லாம் ஜோக்கர் என இங்கே சில பிரபலங்கள் பேசியது என்னை டென்ஷன் ஆக்கியது. நானும் ஜன நாயகன் படத்தை பார்த்து விட்டுத்தான் வந்தேன். அப்போ நான் ஜோக்கரா? ஒரு நாள் ஜன நாயகன் படம் பார்ப்பதில் என்ன கெட்டுப் போக போகிறது. ஜன நாயக முறைப்படி இந்த போராட்டம் நடக்கும் போது அனைவரது கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும் தானே? வெற்றிமாறன் சார் கூட இங்க வந்து பேசினார். அவர் எத்தனை படங்களை இயக்கியுள்ளார் அப்போ அவர் என்ன ஜோக்கரா? இது முழுக்க முழுக்க சில அரசியல் கட்சிகளின் அஜெண்டா போராட்டம் என சனம் ஷெட்டி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.More Articles