சென்னை: தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவரான யோகி பாபு; காமெடியனாக மட்டுமின்றி லீடு ரோலிலும் நடித்துவருகிறார். அந்தப் படங்கள் வெற்றி, தோல்வி என இரண்டையும் சந்தித்திருக்கின்றன. இந்நிலையில் அவர் காகங்கள் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருக்கிறது.

Advertisement

காமெடி கேரக்டரில் நடித்துவந்த யோகி பாபு; நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் லீடு ரோலில் நடித்தார். ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அப்படத்துக்கு பிறகு மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடித்த மண்டேலா படமும் ஹிட்டாகி தேசிய விருது வென்றது. வரிசையாக ஹிட்டானதால் தொடர்ந்து லீடு ரோலில் நடித்தாலும் அந்த இரண்டு படங்கள் மாதிரி வெற்றியை மற்ற படங்கள் கொடுக்கவில்லை.

Advertisement

Photo Credit:

அந்த ரூட்டில் யோகி பாபு: ஒருபக்கம் கதையின் நாயகனாக நடித்தாலும் மறுபக்கம் காமெடி ரோலையும் செய்துவருகிறார். அப்படி அவர் ஜெயிலர், மாவீரன், குட் பேட் அக்லி, டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல் மட்டுமின்றி கேரக்டர் ரோலையும் ஏற்றார். மேலும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பிஸியான ஆர்ட்டிஸ்ட்டாக இருக்கிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் அர்ஜுனன் பேர் பத்து திரைப்படம் வரவிருக்கிறது.

Advertisement

காகங்கள்: அதேபோல் காகங்கள் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். 'காக்கா முட்டை' மற்றும் 'குற்றமே தண்டனை' திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எப்படி இருக்கும் படம்?: மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'காகங்கள்', தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் டிஐ (Digital Intermediate) உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் 'காகங்கள்', விரைவில் ரிலீஸாகவிருக்கிறது படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், புதிய போஸ்டர்கள் மற்றும் ப்ரோமோஷன்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு அதாவது யோகி பாபுவின் பிறந்தநளான 22ஆம் தேதி நிறைவடைந்தது. அவரது பிறந்தநாளையொட்டி ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.