சென்னை: ஹாலிவுட்டின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளில் டாம் ஹாலண்ட் - ஜெண்டயா ஜோடி முக்கியமானது. ஸ்பைடர்மேன் படத்தில் இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளனர். குறிப்பாக, பேட்டியின் போது டாம் ஹாலண்ட் செய்த ஒரு சிறிய செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் ஜூலை 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதையொட்டி படக்குழு பல்வேறு நாடுகளில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. இந்நிலையில் மெக்சிகோவில் நடைபெற்ற புரோமோஷனில் இருவரும் இணைந்து அளித்த பேட்டியில் நடந்த ஒரு தருணம் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

Advertisement

பேட்டியின் போது செய்தியாளர், "தம்பதிகளாக மட்டுமல்ல, இணைந்து பணியாற்றும் கலைஞர்களாகவும் நீங்கள் இருவரும் மிகச் சிறப்பாக இருக்கிறீர்கள்" என்று பாராட்டினார். அதற்கு இருவரும் புன்னகையுடன் நன்றி தெரிவித்தனர். மேலும் இருவரும் அன்பாக தங்களது கரங்களைப் பற்றிக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

இதற்கு முன்பும் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படத்தின் ரோம் பிரீமியரில் டாம் ஹாலண்ட், ஜெண்டயாவை அவரது இயற்பெயரின் நடுப்பெயரான "மரீ" என்று அழைத்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. அந்த அழைப்பைக் கேட்ட ஜெண்டயா திரும்பி சிரித்தபடி பதிலளித்த தருணமும் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

Advertisement

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தி ஒடிஸி' திரைப்படத்திலும் டாம் ஹாலண்டும் ஜெண்டயாவும் இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து பேசிய டாம் ஹாலண்ட், "இந்த படத்தில் நடிக்க அழைப்பு வந்தது பற்றி ஜெண்டயாவிடம் சொன்னேன். உடனே அவர், 'இந்த வாய்ப்பை மறுத்தால் நான் உன்னை விட்டுப் போய்விடுவேன்' என்று ஜாலியாக சொன்னார்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்தை கேட்ட கிறிஸ்டோபர் நோலன் உள்ளிட்ட படக்குழுவினரும் சிரித்ததாக அவர் தெரிவித்தார்.

திருமணத்திற்குப் பிறகும் ஒரே படத்தில் இணைந்து நடித்து, புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இயல்பாக காதலை வெளிப்படுத்தி வரும் டாம் ஹாலண்ட் - ஜெண்டயா ஜோடி தற்போது ஹாலிவுட் ரசிகர்களின் மிகவும் விருப்பமான ஜோடியாக தொடர்ந்து கவனம் பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் படத்தின் புக்கிங் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது.