சென்னை: ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 'ஹார்ட் பீட்' சீசன் 3 வரும் ஜூலை 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தொடரில் இருந்து பிரபல நடிகை யோகலட்சுமி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். இது அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் காதல், சவால்கள், உணர்ச்சிப் போராட்டங்கள் மற்றும் தனிப்பட்ட மோதல்களை மையமாகக் கொண்டு உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் 'ஹார்ட் பீட்'. கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான முதல் சீசன் மக்களிடையே செம ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, 2025ம் ஆண்டு வெளியான இரண்டாவது சீசனும் பிளாக்பஸ்டர் வரவேற்பைப் பெற்றது. இரண்டு சீசன்களிலுமே தலா 100 எபிசோடுகள் இடம்பெற்று ரசிகர்களைக் கட்டிப்போட்டன.

Advertisement

Photo Credit:

ஜூலை 30-ல் சீசன் 3 என்ட்ரி: தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில், டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'ஹார்ட் பீட் சீசன் 3' வரும் ஜூலை 30-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் முந்தைய சீசன்களில் கலக்கிய அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா ஆகியோருடன், புதிதாக 'ஆஹா கல்யாணம்' புகழ் காயு ஸ்ரீ மற்றும் இந்திய மாடலும் நடிகருமான ராகுல் ராஜசேகரன் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

தீபா பாலு வதந்தி: இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் 'ரீனா' கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறிய தீபா பாலு தொடரை விட்டு விலகுவதாக வதந்தி பரவியது. ஆனால், அதற்கு உடனடியாக விளக்கமளித்த தீபா பாலு, நான் தொடரை விட்டு விலகவில்லை, என் கதாபாத்திரமான ரீனா, ஆர்கே மருத்துவமனையில் இருந்து ஏஎம் மருத்துவமனைக்கு மாறுகிறார் இதைத்தான் நான் பதிவிட்டு இருந்தேன் என கூறினார்.

Advertisement

யோகலட்சுமி விலகல்: தீபா பாலுவின் வதந்தி ஓய்ந்த நிலையில், தற்போது 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை யோகலட்சுமி ஹார்ட் பீட் சீசன் 3-ல் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நான் ஹார்ட் பீட் தொடரில் இருந்து விலகுகிறேன். இந்தத் தொடரில் நான் நடித்த 'தேஜு' கதாபாத்திரம் உங்கள் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்தது. உங்களைப் போலவே நானும் தேஜுவை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். ஆனால் இது 'குட் பை' கிடையாது. என் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காக நான் தொடர்ந்து நடித்துக்கொண்டே தான் இருப்பேன் என உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளார்.

Advertisement

அரசன் படத்தில்: நடிகை யோகலட்சுமியின் இந்தத் திடீர் விலகல் முடிவுக்கு முக்கிய காரணம், அவர் அரசன் திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதோடு மட்டுமில்லாமல் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து வருவது தான் இதில் இருக்கு விலகுவதற்கு காரணம். இருப்பினும் நடிகையின் இந்த அறிவிப்பால், 'ஹார்ட் பீட்' தொடரின் தீவிர ரசிகர்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர். தேஜு கதாபாத்திரத்திற்குப் பதிலாக வேறு யாராவது நடிக்கப்போகிறார்களா அல்லது அந்த கேரக்டரே முடிவுக்கு வருகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.