சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஸ்ருதிகா அர்ஜுன் தொகுத்து வழங்கும் 'செகண்ட் லவ்' நிகழ்ச்சியில் இருந்து பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீம் அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன், காதலர்களுக்கு நடுவே புது வைல்ட் கார்ட் போட்டியாளர் வந்து ஏற்கனவே காதலித்து வருபவர்களுக்குள் பிரச்சனையை கிளப்பி உள்ளார்.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:30 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை 5:30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் 'செகண்ட் லவ்' நிகழ்ச்சி, தற்போது 2-வது வாரத்தை எட்டி செம்ம சூடுபிடித்துள்ளது. 6 பெண்கள், 6 ஆண்கள் களமிறங்கிய இந்த ஷோவில், யாருக்கும் காதல் செட்டாகாத போட்டியாளர்களை வெளியேற்றும் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில், பிக் பாஸ் வின்னர் அசீம், எனக்கு இந்த வீட்டுல எந்தப் பொண்ணுகூடவும் வைப் செட்டாகல... ஆனா, நல்ல நண்பர்கள் கிடைச்சிருக்காங்க என கூறி வீட்டை விட்டு வெளியேறினார். அவருடன் சண்டைக் கோழியாக சுற்றி வந்த ஈடன் மற்றும் ராஜாவும் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தினேஷ் - வீணா காதல்: மூன்று பேர் வெளியேறிய கையோடு, பெண்களைக் கவர புதிதாக 3 வைல்ட் கார்ட் ஆண் போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளனர். வந்த முதல் நாளிலேயே ஒரு புது போட்டியாளர், ஏற்கனவே தினேஷுடன் தீவிர காதலில் இருக்கும் வீணாவை டேட்டிங்கிற்கு கூப்பிட்டு குண்டை போட்டார். அதற்கு வீணா, நானும் தினேஷும் ஷோவுக்காக நடிக்கல... உண்மையாவே காதலிக்கிறோம் என மூக்கறுக்கப் பார்த்தார். ஆனால், அசராத அந்தப் புது போட்டியாளர்,வெறும் 15 நாள்ல யாருக்கும் உண்மையா லவ் வராது என வம்பு வளர்த்து பேசினார்.
தினேஷின் மாஸ் சவால்: இதனால் கடுப்பான தினேஷ், இன்னும் ரெண்டு வாரம் இருக்குல்ல... உனக்கு வீணாவை பிடிச்சிருந்து, அவளுக்கும் உன்னை பிடிச்சிருந்தா தாராளமா அவளைக் காதலிச்சுப் பார் என புது போட்டியாளருக்கு ஓபனாகவே சவால் விட்டுள்ளார். மறுபக்கம் தேஜஸ் - நேஹா ஜோடியும் உடைந்து போக, பிரியங்கா, சிந்துரி, மோனிஷா எனப் பல பெண்கள் இன்னமும் சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கலாய்க்கும் நெட்டிசன்கள்: ஒரே வாரத்தில் லவ்வு, அடுத்த வாரமே பிரேக்-அப், அதுக்குள்ள புது ஆள் என்ட்ரி என 'செகண்ட் லவ்' வீட்டில் நடக்கும் கூத்துகளைப் பார்த்த நெட்டிசன்கள், இது எப்படி இருக்கு தெரியுமா... அதெல்லாம் வெளியே சொல்லக் கூடாது என நகைச்சுவை நடிகர் சந்தானம் பாணியில் சோஷியல் மீடியாவில் வச்சு செஞ்சு மீம்ஸ்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.
More Articles
- வயசுல சின்ன பையனை கல்யாணம் செஞ்சா இதுதான் நிலைமை.. தம்பியா? புருஷணா? நீயா நானாவில் வெடித்த விவாதம்!
- சினிமால அவமானம் அதிகம்.. ஆனால், பணம் சம்பாதிக்கலாம்.. விசித்ரா பேட்டி!
- 2 பெண்கள் ஒரு ஆணுடன் டேட்டிங்கா? 'செகண்ட் லவ்' ஷோவுக்கு எழும் எதிர்ப்பு.. கொதிக்கும் நெட்டிசன்ஸ்!
- DD: கல்யாண பொண்ணு மாதிரி மின்னும் டிடி திவ்ய தர்ஷினி.. ரசிகர்கள் கேட்ட முக்கியமான கேள்விகள் லிஸ்ட்
- 6 ஆண்கள்.. 6 பெண்கள்.. ஒரே வீட்டில்.. இந்த மோசமான நிகழ்ச்சியை நிறுத்துங்க.. பொங்கி எழுந்த பயில்வான்!
- செகண்ட் மேரேஜுக்கு ஆள் பிடிக்கும் ஷோவா? 'செகண்ட் லவ்' ஷோவை வெளுத்துவாங்கும் நெட்டிசன்ஸ்!