சென்னை: ஜியோ ஹாட்ஸ்டாரில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் புதிய ரியாலிட்டி ஷோ தான் 'செகண்ட் லவ்'. காதலில் தோல்வியடைந்த அல்லது திருமண வாழ்க்கையில் பிரிவைச் சந்தித்த 6 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 12 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் ஒரு மாதம் தங்கி, தங்களுக்கான இரண்டாவது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த ஷோவின் கான்செப்ட்.
கடந்த ஜூலை 13-ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் தாங்கள் காதலால் மற்றும் திருமண வாழ்க்கையால் சந்தித்த துரோகங்கள், மன வலிகள் குறித்து கண்ணீர் மல்க பேசினார்கள். இது பார்ப்பவர்களின் நெஞ்சங்களையே உருக வைக்கும் வகையில் இருந்த இந்த ஷோவில், தற்போது பிக் பாஸ் பாணியில் சண்டைகளும் பஞ்சாயத்துகளும் வெடிக்க ஆரம்பித்துள்ளது.
பிக் பாஸ் பாணி சண்டை: வீட்டிற்குள் இருக்கும் 12 போட்டியாளர்களிடையே மெல்ல சண்டைகள் ஆரம்பித்துள்ளது. வீட்டில் வீணா மற்றும் தேஜஸ் இருவருக்கு இடையே பயங்கர சண்டை வெடித்தது. அப்போது அவர்களுக்குள் சமரசம் செய்து வைக்கும் வகையில் அசீம் பேசினார். இதனால் கடுப்பான ஈடன் மற்றும் பிரியங்கா இருவரும், இவர் என்ன பெரிய பஞ்சாயத்து தலைவரா? என அசீமைப் பின்னால் பேசத் தொடங்கினர். அதோடு நிறுத்தாமல், அசீம் ஒரு டாமினேட்டர், எல்லாவற்றையும் கேமராவுக்காகவே நடிக்கிறார். அவருடைய பேச்சே பிடிக்கவில்லை என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டனர். இதனால் வீட்டிற்குள் சிறு வாக்குவாதங்கள் வெடித்தன.
ரம்யா கிருஷ்ணன் ஷாக்: இந்நிலையில், நேற்றைய எபிசோடில் ரம்யா கிருஷ்ணன் வந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் பற்றியும் கேட்டார். அப்போது,ஈடன் எனக்கு அசீமுடன் சுத்தமாக கனெக்ட் ஆகவே இல்லை, அவர் கேமராவுக்காக நடப்பது போல தெரிகிறது. எல்லாரையும் அடக்கி ஆள நினைக்கிறார். அவர் தனது வாழ்க்கைக் கதையைச் சொன்னபோது எனக்கு அது டிராமா போலத்தான் தெரிந்தது, கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லை என்றார்.
நான் ஷோவை விட்டு போறேன்: ஈடனின் பேச்சைக் கேட்டு ஆத்திரமடைந்த அசீம், என்ன பேசுறீங்க நீங்க? என்னோட வாழ்க்கையில நடந்த விஷயம் உங்களுக்கு டிராமாவா தெரியுதா? நான் இயல்பிலேயே இப்படித்தான். எனக்கு கேமரா முன்னாடி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு ஏற்கனவே பெயரும் புகழும் எல்லாமே இருக்கு, இப்படி பேசியதற்கு முதலில் நீங்க என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தினார். பதிலுக்கு ஈடனும் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாதது என்று பேச இருவருக்கும் இடையே சண்டை வந்தது. உடனே, இதுக்கு மேல இந்த நிகழ்ச்சியில இருக்க எனக்கு விருப்பமே இல்லை. நான் இந்த ஷோவை விட்டு வெளிய போறேன் என்று அதிரடியாகக் கூறி ஷாக் கொடுத்தார். இதைப் பார்த்து ரம்யா கிருஷ்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் திகைத்துப் போய் அமைதியானார். அதன் பிறகு சக போட்டியாளரான தேஜஸ், அசீமைச் சமாதானப்படுத்தி பிறகே நிகழ்ச்சி மீண்டும் தொடங்கியது.
அசீம் புறக்கணிப்பு: இதைத்தொடர்ந்து பாவக்காய் ஜூஸ் கொடுக்கும் செக்மென்டில், பிரியங்கா, ஈடன் மற்றும் சில பெண் போட்டியாளர்கள் அசீமைத் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை முகத்திற்கு நேராகவே சொல்லி, அவருக்கு 'பாவக்காய் ஜூஸ்' கொடுத்தனர். முதல் திருமண வாழ்க்கையில் காதலித்து, அதிலிருந்து நொந்து நூடுல்ஸ் ஆகி, ஒரு நல்ல இரண்டாவது வாழ்க்கையைத் தேடிச் வந்த அசீமுக்கு, பிக் பாஸ் வீட்டில் நடந்தது போலவே இங்கும் அசிங்கமும் புறக்கணிப்புமே நடக்கிறது. இதனால், இந்த 'செகண்ட் லவ்' நிகழ்ச்சி அசீமுக்கு செட் ஆகாது என்றே நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
More Articles
- 2 ஆண்டில் முடிந்த திருமண வாழ்க்கை..‘செகண்ட் லவ்' ஷோவில் கலங்கிய அசீம்.. பாவய்யா இந்த மனுஷன்!
- பிக்பாஸ் விக்ரமனை வச்சு செய்யும் அசீம்.. இப்படி ஓப்பனா இறங்கி அடிக்கிறாரே!
- Bigg Boss 7 - கமல் செய்தது தவறுதான்.. பிரதீப்புக்கு சப்போர்ட்டாக களமிறங்கிய அசீம்
- Bigg Boss Azeem: நீ பற்ற வைத்த நெருப்பொன்று... பிக் பாஸ் விக்ரமனை சைலண்டாக அட்டாக் செய்த அசீம்!
- Big Boss Azeem - பிக்பாஸ் அசீம் ஹீரோவாகிறாரா?.. இயக்குநர் யார் தெரியுமா?
- இளம் பெண்ணை ஏமாற்றினாரா பாலாஜி முருகதாஸ்? ஆபாசமாக பேசிய ஆடியோவை வெளியிட்ட ஜோ மைக்கேல்!