சென்னை: மகன் படத்துக்கே அப்பாவுடைய கடைசி படம் பெரிய சிக்கலாக மாறி ரிலீஸ் தேதியே தள்ளிப் போகும் நிலை உருவாகியுள்ளது. லைகா தயாரிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள சிக்மா திரைப்படம் ஜூலை 31ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எப்போ ரிலீஸ் என்கிற எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல், ஜன நாயகன் பட ரிலீஸ் காரணமாக சைலன்ட் ஆகி விட்டனர்.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடித்த டிசி திரைப்படமும் அடுத்த வாரம் திரைக்கு வரவிருந்த நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட மாதவனின் ஜிடி நாயுடு திரைப்படமும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
வரும் ஜூலை 31ம் தேதி எந்த படமும் வெளியாகாதா என நினைத்த நிலையில், ஓடிடியில் தனுஷ் அக்கா மகன் பவிஷ் நடித்த 'லவ் ஓ லவ்' திரைப்படம் வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2வது படமும் சொதப்பல்: தனுஷ் இயக்கத்தில் பவிஷ் அறிமுகமான நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் எப்படி சொதப்பியதோ அதே போல பவிஷ், செல்வராகவன் நடிப்பில் வெளியான லவ் ஓ லவ் திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வெற்றியை பெற முடியாமல் சொதப்பி விட்டது. அடுத்தும் பவிஷ் குஷ்பு மகளுடன் இணைந்து நடித்துள்ள அட்டாக்கர் திரைப்படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்.
லவ் ஓ லவ் ஓடிடி ரிலீஸ் தேதி: வரும் ஜூலை 31ம் தேதி பவிஷ், நாக துர்கா, வனிதா விஜயகுமார், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்த காதல் திரைப்படமான லவ் ஓ லவ் திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தியேட்டரில் பவிஷ் படத்தை பார்க்க மிஸ் பண்ண ரசிகர்கள் ஓடிடியில் ஒருமுறை லவ் ஓ லவ் படத்தை பார்த்து ரசிக்கலாம்.
கான் சிட்டி ஓடிடி ரிலீஸ்: ஜன நாயகன் படத்தை தியேட்டரில் பார்த்து விட்ட ரசிகர்கள், இந்த வெள்ளிக்கிழமை ஏதாவது புதிய படத்தை பார்க்க விரும்பினால், நெட்பிளிக்ஸ் ஓடிடியில் அர்ஜுன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி, விடிவி கணேஷ் நடிப்பில் பக்கா ஸ்கேம் காமெடி படமான கான் சிட்டி படத்தை கண்டு ரசிக்கலாம்.
More Articles
- Love Oh Love Review: லவ்வோ லவ் விமர்சனம்.. பவீஷ்க்கு இது சக்சஸா? இல்லை சறுக்கலா?
- வனிதா விஜயகுமார் வேற லெவல்.. சின்ன கேப் கிடைச்சாலும் விடவில்லையே.. என்ன ஆனது?
- லவ்வோ லவ்.. தனுஷின் அக்கா மகனுக்கு ஸ்பெஷலாக சமைத்துக் கொடுத்த வனிதா விஜயகுமார் மகள்.. ஒரே பாசம்
- முதல் காதலை பற்றி அப்படி சொல்ல காரணம்?.. ஓபனாக போட்டுடைத்த வனிதா விஜயகுமார்
- மல்லிகைப்பூ, புடவை, கிராமத்து லுக்... ஜோவிகாவின் புதிய லுக்.. ஹீரோயினாக புதிய இன்னிங்ஸ்
- என் முதல் காதலை பற்றி சொன்னா தமிழ்நாடே அதிருமே.. வனிதா உடைத்த உண்மை.. அந்த டாப் ஹீரோவா?