சென்னை: இந்தியாவின் முன்னணி ஓடிடி படைப்புகளை கவுரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருது விழாவில் இசையமைப்பாளர் சாம் சி எஸ் 'சுழல் 2' வெப் சீரிஸுக்காக Best Original Soundtrack - Regional பிரிவில் விருது வென்றுள்ளார். இது குறித்த தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் சாம் சி.எஸ் பின்னணி இசைக்காக தேசிய அளவில் விருது பெறத் தகுதியானவர், ஜூரிக்கள் திறமையானவரை அங்கீகரித்துள்ளனர் என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement

இந்த விருது விழாவில் 'சுழல் 2' வெப் சீரிஸ் மொத்தம் மூன்று முக்கிய விருதுகளை வென்றுள்ளது. சிறந்த பிராந்திய வெப் சீரிஸ் (Best Series - Regional), சிறந்த பிராந்திய ஒரிஜினல் சவுண்ட்டிராக் (Best Original Soundtrack - Regional) ஆகிய பிரிவுகளில் சாம் சி எஸ் விருது பெற்றதுடன், Best Actor - Series (Female) Critics - Regional பிரிவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விருது வென்றுள்ளார். இதன் மூலம் 'சுழல் 2' வெப் சீரிஸ் குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

தென்னிந்திய சினிமாவில் பின்னணி இசைக்கு என்று தனி அடையாளத்தை உருவாக்கியுள்ள சாம் சி எஸ், ஒவ்வொரு காட்சியின் உணர்வையும் இசையின் மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் வல்லவர். குறிப்பாக த்ரில்லர், சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் கதைகளில் அவரது பின்னணி இசை, கதையின் ஓட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கும். அதனால்தான் பின்னணி இசை என்றாலே இயக்குநர்களின் முதல் தேர்வாக அவர் தொடர்ந்து இருந்து வருகிறார்.

பின்னணி இசை என்றாலே: 'சுழல் 2' வெப் சீரிஸிலும் கிராமத்து பின்னணி, குடும்ப உறவுகள், மர்மம் மற்றும் விசாரணைக் காட்சிகளுக்கு ஏற்ப சாம் சி எஸ் அமைத்த பின்னணி இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. பலரும் சமூக வலைதளங்களில் அந்த பின்னணி இசையை தனியாக பாராட்டியிருந்தனர். தற்போது அதற்கேற்ற அங்கீகாரமாக இந்த விருதும் கிடைத்துள்ளது.

Advertisement

திரைப்படம், வெப் சீரிஸ் என எதுவாக இருந்தாலும், கதைக்கு ஏற்ற இசையை வழங்குவதே தனது பாணி என்பதை சாம் சி எஸ் தொடர்ந்து நிரூபித்து வருகிறார். வணிக ரீதியான பாடல்களுக்கும், உணர்வுபூர்வமான பின்னணி இசைக்கும் அவரது திறமையே அவரை இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியுள்ளது.

தற்போது பணியாற்றும் படங்கள்: தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் 'கராத்தே பாபு', 'சர்தார் 2', புஷ்கர் - காயத்ரி இயக்கும் புதிய படம், ஹெச். வினோத் - தனுஷ் கூட்டணி திரைப்படம், 'டிமான்டி காலனி 3' உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், நடிகர் ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்திற்கும் இசையமைக்கிறார்.

Advertisement

தொடர்ந்து தேசிய அளவில் அங்கீகாரங்களைப் பெற்று வரும் சாம் சி எஸ், வித்தியாசமான இசை முயற்சிகளின் மூலம் தனது தனி முத்திரையை பதித்து வருகிறார். 'சுழல் 2' வெப் சீரிஸுக்காக கிடைத்துள்ள இந்த விருது, அவரது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.