சென்னை: தமிழ் சினிமாவில் எப்போதுமே கமர்ஷியல் மசாலா படங்களை தாண்டி, சற்றே வித்தியாசமான கதைக் களங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கில்லாடி நம்ம விஜய் ஆண்டனி. அந்த வகையில், கடந்த மாதம் ஜூன் 19-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி, ஒட்டுமொத்த பெண்களின் மனங்களையும் வென்ற திரைப்படம் தான் நூறு சாமி. விஜய் ஆண்டனி, சசி கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பிச்சைக்காரன் படத்தின் அந்தத் தாய்பாசம் தான். அந்த இமாலய வெற்றிக்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் 'நூறு சாமி படத்தில் இணைந்தனர். தற்போது இத்திரைப்படத்தின் ஓடிடிமற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த மரண மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து, இயக்குனர் சசி இந்தத் திரைப்படத்தை மிகவும் நேர்த்தியாகவும் இயக்கியுள்ளார். சிறுவயதிலேயே கணவனை இழந்த ஒரு கைம்பெண் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்வாசிகா நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். தன்னுடைய இரண்டு மகன்களையும் மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கும் ஸ்வாசிகா, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என ஆசைப்படுகிறார். சிறுவயதில் அந்த விருப்பத்தை மகன்களிடம் சொல்ல, அவர்கள் அதைத் புறக்கணிக்கிறார்கள்.

Advertisement

Photo Credit:

நூறு சாமி: ஆனால், வளர்ந்து விபரம் தெரிந்த பிறகு, தன் தாயின் தனிமையைப் புரிந்துகொள்ளும் மகன்கள், தங்களது தாய்க்கு ஒரு துணை வேண்டும் என முடிவு செய்து மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அதற்கு அந்தப் கிராம மக்கள் எப்படி எதிர்ப்பு தெரிவித்தார்கள், குடும்பத்திற்குள் என்னென்ன புயல் வீசியது என்பதைப் பெண்களின் கண்ணீரோடு அழகாகப் பேசியிருக்கிறது நூறு சாமி படம்.

ஓடிடியில் நூறு சாமி?: விஜய் ஆண்டனியுடன் இணைந்து ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் என பலர் நடித்துள்ளனர். தியேட்டரில் இந்தப் படத்தைப்பார்த்த பல பெண்கள், இயக்குனர் சசியையும் விஜய் ஆண்டனியையும் கட்டிப்பிடித்து, இப்படி ஒரு படத்தை எடுத்ததற்கு நன்றி என உணர்ச்சிப் பொங்கக் கண்ணீர் மல்க வாழ்த்தினர். பாசிட்டிவ் விமர்சனங்களால் பாக்ஸ் ஆபீஸிலும் படம் நல்ல வசூலைக் குவித்தது. தியேட்டர்களில் பெண்களின் பேராதரவோடு பிளாக்பஸ்டர் அடித்த இந்த நூறு சாமி திரைப்படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை 'ஜி' நிறுவனம் பெரும் விலை கொடுத்துக் கைப்பற்றியுள்ளதால், ஜி5 ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாவதற்கான அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி இன்னும் சில தினங்களில் வெளியாகும். தியேட்டரில் இந்த படத்தை மிஸ் பண்ணியவர்கள் ஓடிடி ரிலீஸுக்காக இப்போதே காத்துக்கொண்டிருக்கிறார்கள்.