சென்னை: ஜமா படத்தை இயக்கி நடித்த பாரி இளவழகன் மீண்டும் கதையெழுதி இயக்கி நடித்துள்ள படம் தான் 'அன்பே டயானா'. கிறிஸ்டோபர் நோலன் 'தி ஒடிசி' படத்தையே கொண்டு வந்தாலும் பார்த்துக்கலாம் என பயப்படாமல் இந்த வாரம் ஜூலை 17ம் தேதி தனது படத்தை களமிறக்க முடிவு செய்துள்ளார்.

Advertisement

விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் அடுத்த வாரம் வெளியானால் கூட நம்ம படம் ஓடும் என்கிற நம்பிக்கையுடன் உள்ள பாரி இளவழகன் சமீபத்தில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் யூடியூப் விமர்சகர்களுக்கு தனது படத்தை தாகூர் ஃபிலிம் சென்டரில் திரையிட்டார்.

Advertisement

Photo Credit:

படத்தை விழுந்து விழுந்து சிரித்து பார்த்த இட்டிஸ் பிரசாந்த், இயக்குநர் இரா. சரவணன் உள்ளிட்ட பலர் அன்பே டயானா படம் எப்படி இருக்கு என்பது குறித்த முதல் விமர்சனத்தை கூறியுள்ளனர்.

விஜய் தொகுதியை பார்க்க ரெடியா?: முதலமைச்சர் விஜய் எம்.எல்.ஏவாக வெற்றிப் பெற்ற பெரம்பூர் தொகுதியை இன்ச் பை இன்ச் பார்க்க ஒட்டுமொத்த தமிழ்நாடு ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக 'அன்பே டயானா' படம் அமையவுள்ளது. பெரம்பூர் ஏரியாவையே பிரித்து மேய்ந்து படத்தில் காட்டியுள்ளார் என இந்த படத்தில் நடித்துள்ள பரிதாபங்கள் கோபி சமீபத்தில் நடைபெற்ற பிரஸ் மீட்டில் படத்தை பற்றி பேசியிருந்தார்.

Advertisement

எங்கே சிரிக்கணும், எங்கே அமைதியாகணும்: அன்பே டயானா படத்தை பார்த்த இயக்குநர் இரா. சரவணன் படத்தின் வெற்றி ரசிகர்கள் முகத்திலேயே தெரிகிறது. எந்த இடத்துல சிரிப்பீங்க, எந்த இடத்துல அமைதியாக இருப்பீங்க, எங்கே ஃபீல் பண்ணுவீங்கன்னு நினைச்சோமோ அந்த இடங்களில் எல்லாம் அப்படியே இருந்தது என படம் குறித்து பாசிட்டிவாக பேசியுள்ளார்.

பிரசாந்த் ரங்கசாமி விமர்சனம்: அன்பே டயானா படத்தை யூடியூப் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமியும் பார்த்து விட்டார். அந்த இடத்திலேயே அவர் படம் ரொம்ப ஹேப்பியா ஃபீல் பண்ண வைத்தது என்று தனது முதல் விமர்சனத்தைக் கொடுத்துள்ளார். மேலும், ஹீரோ பாரியின் அப்பாவாக நடித்துள்ள சேத்தனை பார்த்தால் நமக்கு இப்படியொரு தகப்பன் இல்லாமல் போயிடுச்சேன்னு இருக்கு என்றும் அன்பே டயனா படம் பற்றி கூறியுள்ளார். மேலும், படத்துல லாஸ்ட் 20 நிமிடங்கள் ஏகப்பட்ட ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் உடன் செம ஜாலியாக இருக்கு என்றும் படத்தை பார்த்த இன்ஃப்ளூயன்சர்கள் பாராட்டியுள்ளனர். வரும் ஜூலை 17ம் தேதி இந்து பையன் ஆங்கிலோ இந்தியன் கிறிஸ்டியன் பொண்ணுக்கு இடையே நடக்கவுள்ள காதல் படமான அன்பே டயானா படம் ரசிகர்களுக்காக திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.