சென்னை: கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்திருக்கும் திரைப்படம் அருள்வான். இதில் அவருடன் விடிவி கணேஷ், ஆரவ், ரம்யா பாண்டியன், ஜான் விஜய் என பலர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இன்று தியேட்டர்களில் வெளியான படத்தை ரசிகர்கள் ஆர்வத்தோடு சென்று பார்த்தார்கள். அதனைத் தொடர்ந்து தங்களது விமர்சனங்களையும் அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்திருப்பவர் அருள்நிதி. இப்போது அவர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்வான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்ற அருள்வான்; இன்று தியேட்டர்களில் ரிலீஸானது. மக்களும் ஆர்வத்தோடு சென்று படம் பார்த்தார்கள். முதல் காட்சியை பார்த்து முடித்த அவர்கள் தங்களது விமர்சனத்தையும் பகிர்ந்திருக்கிறார்கள்.
அருள்வான் பப்ளிக் விமர்சனம்: அந்தவகையில், படம் பார்த்த ரசிகர் பேசுகையில், "மலை வாழ் மக்களுக்கும் கல்வி போய் சேர வேண்டுமென்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். முதல் பாதியைவிடவும் இரண்டாவது பாதியின் ஸ்க்ரீன் ப்ளே சூப்பராக இருக்கிறது. இந்தப் படத்தில் அருள்நிதி நடித்ததே பெரிய விஷயம். அனைவரும் சென்று பார்க்க வேண்டிய படம். படமாக பார்க்கும்போது சூப்பராக இருக்கிறது. இது ஹரி படம் இல்லை. வேகமாக செல்வதற்கு" என்றார்.
இரண்டாவது பாதி சூப்பர்: அவரைத் தொடர்ந்து இன்னொரு ரசிகர் பேசுகையில், "படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. அதிலும் இரண்டாவது பாதி அருமையாக இருக்கிறது. படத்தில் நடித்த அனைவருமே சூப்பராக செய்திருக்கிறார்கள். முதல் பாதி ஸ்லோவாக இருக்கிறது. இரண்டாவது பாதியெல்லாம் சான்ஸே இல்லை. கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்" என்றிருக்கிறார்.
ரசிகையின் கருத்து இதுதான்: அதேபோல் படம் பார்த்துவிட்டு பேசிய இளம் ரசிகை ஒருவர், "படம் நன்றாக இருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை பேசியிருக்கிறார்கள். மலைவாழ் மக்களுக்கு கல்வியை கலெக்டர் கொண்டு வருகிறார். குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம். முதல் பாதி ஸ்லோவாக போனாலும் இரண்டாவது பாதி அருமையாக இருந்தது. இதுமாதிரியான படங்கள் அதிகம் வருவதில்லை. இதுபோன்ற படங்கள் அடிக்கடி வர வேண்டும்" என புகழ்ந்தார்.
அவர் படம் என்றாலே அப்படித்தான்: ரசிகர் ஒருவர், "படத்தில் கல்வி குறித்து பேசியிருக்கிறார்கள். அருள்நிதியின் படம் என்றாலே அதில் நல்ல மெசேஜ் கண்டிப்பாக இருக்கும். தியேட்டரில் வந்து படம் பாருங்கள். யாரும் மிஸ் செய்ய வேண்டாம். அருள்நிதியின் நடிப்பு அருமையாக இருக்கிறது. இளைஞர்கள் எல்லோருக்கும் நிச்சயம் படம் பிடிக்கும். ஜிவி பிரகாஷின் இசை அட்டகாசமாக இருக்கிறது. அனைவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள்" என்றார்.
ஜென் ஸியின் கருத்து: அவர்களைத் தொடர்ந்து ஜென் ஸி தலைமுறையை இளைஞர் ஒருவர் கூறுகையில், "படம் நல்ல மோட்டிவேட்டாக இருக்கிறது. நல்ல படம். மலை வாழ் மக்களின் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தியிருக்கிறார்கள். அருள்நிதியும், இயக்குநரும் சூப்பராக செய்திருக்கிறார்கள். பிரசார தொனியில் படம் இல்லை. அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்" என்றார். இப்படி படம் பார்த்த பலரும் படத்தை கொண்டாடிவருகிறார்கள். இதன் காரணமாக அடுத்தடுத்த காட்சிகளுக்கு தியேட்டரில் கூட்டம் அதிகமாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
More Articles
- Arulvaan X Review - அருள்வான் எக்ஸ் விமர்சனம்.. அருள்நிதிக்கு ஹிட் கிடைத்ததா? இல்லையா?
- அருள்நிதியின் அப்பா, அம்மாவுக்கு பீமரத சாந்தி விழா.. பெற்றோருக்கு முகத்தில் மகிழ்ச்சியை பாருங்க
- Demonte Colony 3: டிமான்டி காலனி 3 ரிலீஸ் தேதி சொல்லியாச்சு.. ஹாரர் பட ரசிகர்களே ஒரு சரவெடி விருந்து ரெடி!
- டிமான்ட்டி காலனி 3.. மெயின் வில்லனே இவர் தானாம்.. லைபரியனா மிரட்டப்போறது யாருன்னு பாருங்க!
- அக்கா, தம்பி அலப்பறை.. அருள்நிதியின் மை டியர் சிஸ்டர்.. படத்தின் ப்ரோமோ வெளியீடு!
- Rambo OTT Review - அருள்நிதியின் ராம்போ எப்படி இருக்கு?.. முத்தையா ரம்பத்தை வெச்சிட்டாரே.. இதோ விமர்சனம்