Rating:
3.0/5
Star Cast: அருள்நிதி, கிருத்திகா, ஆரவ்
Director: கணேஷ் விநாயகன்

சென்னை: 2021ல் வெளியான 'தேன்' படத்தைத் தொடர்ந்து இன்னொரு அருமையான படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் கணேஷ் விநாயகன். நூறு சாமி படத்தில் விஜய் ஆண்டனி வருவதை போல 2வது பாதியில் கலெக்டர் முத்துவேலாக வரும் அருள்நிதி தனது தேர்ந்த நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார்.

Advertisement

எவ்வளவு பெரிய மலையில் ஆதி குடிகளாக இருந்தாலும் கல்வி அறிவு இல்லையென்றால் எளிதில் ஒரு கைநாட்டு வைக்கச் சொல்லி ஏமாற்றிவிட முடியும் என்பதில் தொடங்கி கல்வியின் முக்கியத்துவமும் குறிப்பாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தையும் சொல்லியிருக்கும் விதமே படத்தை பாராட்ட வைக்கிறது.

Advertisement

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சுமார் 2000க்கும் குறைவான மக்கள் மட்டுமே பேசக் கூடிய காடர் மொழியை இந்த படத்தில் பேசி நடித்துள்ள நடிகர்கள் அற்புதம். அழிவு நிலையில் உள்ள காடர் மொழி பேசுவது புரியாது என்பதற்காக தமிழில் மொழி பெயர்த்துள்ளார் இயக்குநர்.

அருள்வான் கதை: மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மேல் குடிகளில் எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வரும் காடர்கள் கூட்டத்தில் மூத்தோராக இருந்து முருகன் வேடமிட்டு சாமியாடி மக்களை வழிநடத்தும் தனது தாத்தாவை வனத்துறை அதிகாரியான பாண்டியன் (ஜான் விஜய்) மானை சுட்டுக் கொன்று விட்டு அந்த பழியை மூத்தோர் மீது போட அவர் அதை செய்யவில்லை என வெற்று பத்திரத்தில் கை நாட்டு வைக்கச் சொல்லி சித்ரவதை செய்துவிட்டு பின்னர் மலை வாழ் மக்களை வெளியேற்ற காசு வாங்கிவிட்டார் என பொய் பட்டம் கட்டி விடுகிறார்.

Advertisement

அதனால் மூத்தோர் மனம் வாடி தனது கட்டை விரலை அறுத்துக் கொண்டு உயிரையும் மாய்த்து விடுகிறார். தாத்தா இறப்பதற்கு முன்னதாக தனது பேத்தி குறிஞ்சியிடம் (கிருத்திகா) படிப்பின் அவசியத்தை சொல்லிவிட்டு மரணித்த நிலையில், எப்படியாவது படிக்க வேண்டும் என 15 கி.மீ., உள்ள பள்ளிக்குச் செல்கிறார். உங்கள் மலை கிராமத்துக்கே அரசு பள்ளியை கொண்டு வர கலெக்ட்டரை பார்க்கச் சொல்லி ஆசிரியர் அறிவுரை வழங்கிய நிலையில், அப்பா கந்தன் (ஆரவ்) மற்றும் அம்மா அமரவள்ளியிடம் சொல்கிறார் (ரம்யா பாண்டியன்).

ஆனால், அதற்குள் குறிஞ்சி வயதுக்கு வந்துவிட அவருக்கு திருமணச் சடங்குகள் அரங்கேறுகின்றன. கல்யாணம் வேண்டாம் கல்வி தான் வேண்டும் என முடிவெடுக்கும் குறிஞ்சி முத்துவேல் கலெக்டரை எப்படி சந்தித்தார்? தனது மலை கிராமத்துக்கு பள்ளியை கொண்டு வந்தாரா? இல்லையா? என்பது தான் இந்த அருள்வான் படத்தின் கதை.

Advertisement

பிளஸ்: அருள்நிதி முத்துவேல் எனும் கலெக்டர் கதாபாத்திரத்தில் 2ம் பாதி படத்தை ஒட்டுமொத்தமாக தாங்குகிறார். பெத்தி படத்தில் மலை வாழ் மக்களுக்கு ரயில் பாதை இல்லை என சொல்லிவிட்டு செட் போட்டு படம் எடுத்திருப்பார்கள். ஆனால், நேரடியாக மலைகளுக்குச் சென்று அவர்களது கலாச்சாரம், மொழி, அவர்கள் படும் கஷ்டம் என்று அனைத்தையுமே கண் முன் காட்டிய விதத்தில் இயக்குநர் கணேஷ் விநாயகனின் உழைப்பும் மெனக்கெடலும் சமூக அக்கறையும் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

முருகனை மலைவாழ் மக்கள் எப்படி வணங்கினார்கள் என்பதை காட்டிய விதம் அருமை. இனிமேல் வரப்போகும் தொடர்ச்சியான முருகப் படங்களில் முருக வழிபாட்டை இப்படி காட்டுவார்களா என்பது சந்தேகம் தான். கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் அருள்நிதி இப்படியொரு சமூக அக்கறை படைப்பை தேர்வு செய்து நடித்தது சிறப்பு. எம். சுகுமார் மலைகளின் அழகையும் அங்கே வாழும் மக்களின் வலியையும் படம் பிடித்த விதம் பாராட்டுக்குரியது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இந்த படத்துக்கு பெரும் பலமாக தனது இசை மூலம் மாறி நிற்கிறார். ஜான் விஜய் வில்லத்தனத்தில் மிரட்ட, காளி வெங்கட் பத்திரிகையளராக உதவி செய்ய விடிவி கணேஷ் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை செய்துள்ளனர்.

Advertisement

மைனஸ்: காடர் மொழி பேசும் மக்களின் பாஷைக்கு தமிழ் டப்பிங் செய்தது கமர்ஷியல் பார்வையாகவே தெரிகிறது. காடர் மொழியே மலைவாழ் மக்கள் பேசும் தமிழ் போலவே புரிந்துக் கொள்ள முடிகிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட படம் என்பதால் சில இடங்களில் ஆவணப்படம் பார்க்கும் உணர்வை தருகிறது. ஆனால், அதையெல்லாம் கடந்து கிருத்திகா மற்றும் அருள்நிதியின் நடிப்பு கடைசி வரை படத்தை வியந்து பார்க்க வைத்து விடுகிறது. கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த அனுபவத்தை மிஸ் செய்து விட வேண்டாம்.