சென்னை: அருள்நிதி நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் அருள்வான். இதில் ஆரவ், விடிவி கணேஷ் என பலர் நடித்திருக்கிறார்கள். நேற்று திரையிடப்பட்ட பத்திரிகையாளர் காட்சியில் படத்துக்கு ஓரளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸே கிடைத்தது. இந்நிலையில் இன்று தியேட்டர்களில் படம் வெளியாகியிருக்கும் சூழலில்; படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

Advertisement

தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க குடும்பத்திலிருந்து வந்தாலும்; ரொம்பவே எதார்த்தமாக இருப்பவர் அருள்நிதி. வம்சம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர்; தொடர்ச்சியாக வித்தியாச வித்தியாச கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். அவரது ஸ்க்ரிப்ட் சென்ஸ் பலரிடமும் பாராட்டை பெற்றது. சில வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

Advertisement

Photo Credit:

அருள்நிதியின் அருள்வான்: இப்போது அவர் அருள்வான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை கணேஷ் விநாயக் என்பவர் இயக்க; விடிவி கணேஷ், ஆரவ், ரம்யா பாண்டியன், காளி வெங்கட், ஜான் விஜய் என பலர் நடித்திருக்கிறார்கள். நேற்றைய சிறப்பு திரையிடலில் படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. எனவே படத்துக்கு ஹைப்பும் ஏறியது. இந்நிலையில் இன்று தியேட்டர்களில் வெளியான அந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.

Advertisement

அருள்வான் எக்ஸ் விமர்சனம்: ரசிகர் ஒருவர் தன் எக்ஸ் பக்கத்தில், "அருள்வான் படத்துக்கு ஐந்துக்கு 3.25 மதிப்பெண் கொடுக்கலாம். கல்வி கற்க வேண்டும் என்ற கனவை கொண்ட ஒரு பழங்குடியின சிறுமியின் பயணத்தை மனம் நெகிழ வைக்கும் வகையில் சொல்லும் திரைப்படம். படத்தின் உயிர்நாடியே உணர்வுப்பூர்வமான ஒரு ட்ராமாதான். குறிப்பாக சிறுமிக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் இடையே இருக்கும் காட்சிகள் பலம். முக்கியமான கருத்தை பிரசங்கம் செய்வது போல் தோன்றாமல் இயல்பாக சொல்லியிருக்கிறார்கள்" என குறிப்பிட்டிருக்கிறார்.

யதார்த்தமான படம்: இந்த ரசிகரும் படத்துக்கு 3.5 மதிப்பெண் கொடுத்திருக்கிறார். மேலும் அவர், "மிகவும் உணர்வுப்பூர்வமான யதார்த்தமான திரைப்படம். அருள்நிதி மிகையாக இல்லாமல் முதிர்ச்சியான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆரவ் பழங்குடியின மனிதராக முழுமையாக தன்னை மாற்றி நடித்திருக்கிறார். ரம்யா பாண்டியன் தன்னுடைய கேரக்டருக்கு நியாயம் செய்திருக்கிறார். குழந்தை நட்சத்திரம் கிருத்திகா பாலாவும் அபாரமான நடிப்பில் அசத்துகிறார். ஜிவியின் இசை, இளையராஜாவின் கலை இயக்கம், சுகுமாரின் ஒளிப்பதிவு, யுகபாரதியின் பாடல், கிஷோரின் எடிட்டிங் படத்துக்கு பலம். இயக்குநர் கணேஷ் விநாயக் மனதை தொடரும் ஒரு அரிய படத்தை உருவாக்கியுள்ளார்" என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

படிப்புதான் சார் எல்லாமே: இந்த ரசிகர், "ஒரு பழங்குடியின சிறுமியின் கல்விக்கான தவிப்பும், அதற்கு துணை நிற்கும் ஒரு மாவட்ட ஆட்சியரின் போராட்டம்தான் கதைக்களம். குழந்தை நட்சத்திரம் கிருத்திகா தன்னுடைய ரோலுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். அருள்நிதி கலெக்டராக பொருந்துகிறார். த்ரில்லர் படங்களிலேயே அதிகம் பாத்தவரை இப்படி பார்ப்பது நன்றாக இருக்கிறது.

டீசன்ட் வாட்ச்: ஆரவ், ரம்யா, ஜான் விஜய் நடிப்பு சூப்பர். விடிவி கணேஷ், நிரோஷா என பலர் இருக்கிறார்கள். ஜிவி பிரகாஷின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப இருக்கிறது. படத்தின் பெரிய பலம் ஒளிப்பதிவு. மலையின் அழகை கண் முன் கொண்டு வருகிறார்கள். படம் பேசும் ஒரு முக்கிய கருத்துக்காகவே தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம். டீசன்ட் வாட்ச் கொடுக்கக்கூடிய படம். படிப்புதான் இங்கே எல்லாமே" என புகழ்ந்திருக்கிறார். படத்துக்கு இதுவரையில் பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனமே கிடைத்திருப்பதால்; அருள்நிதிக்கு இப்படம் ஹிட் லிஸ்ட்டில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.