சென்னை: பாரி இளவழகன் இயக்கி அவரே ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் அன்பே டயானா. அவருடன் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.
ஜமா படத்தை இயக்கி நடித்து அறிமுகமானவர் பாரி இளவழகன். தியேட்டரில் வெளியானபோது அந்தப் படம் பெரிய கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் ஓடிடியில் வெளியான பிறகு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்போது அவர் அன்பே டயானா படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் அவருடன் ரோஜா, சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். நேற்று வெளியான அந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: அந்த வீடியோவில் அவர், "ஹீரோவின் குடும்பம் தெலுங்கு பேசும் குடும்பம். அந்த ஹீரோ ஆங்கிலோ இந்திய பெண்ணை காதல் செய்கிறார். ஆனால் அவர்களது கலாசாரத்தை பார்த்து பயப்படும் ஹீரோ; அந்த்ப் பெண்ணை கழற்றிவிட பார்க்கிறார். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் இப்படத்தின் கதை. கதையும், ஐடியாவும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் ஒழுங்காக எழுதவில்லை.
ஆசையே இல்லை: இந்த மாதிரியான காதல் கதையில் ஹீரோவும், ஹீரோயினும் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று படம் பார்ப்பவர்களுக்கு தோன்ற வேண்டும். ஆனால் இதில் பெரிய குழப்பம். ஹீரோவுக்கே ஹீரோயினை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இல்லாதபோது படம் பார்க்கும் நமக்கு என்ன தோன்றும்?.. இரண்டாவது பாதி முழுக்க வேஸ்ட்தானே. ஹீரோயினை கட்டிக்கொள்ளும்படி சீன்களை செய்திருந்தால் பரவாயில்லை. அப்படியும் சீன்களை காணவில்லை.
அதுமட்டும்தான் புத்திசாலித்தனம்: ரொம்ப மேம்போக்காக கதையை சொல்லியிருக்கிறார்கள். கதைக்களம் மட்டும்தான் புத்திசாலித்தனமாக இருக்கிறது. கலாசாரங்களுக்கு இடையே ஒத்துவரவில்லை என்று மட்டும் சொல்லியிருந்தால் இந்தப் படத்துக்கு ஸீரோ மார்க்தான். அந்த ஆங்கிலோ இந்தியன் குடும்பம்தான் இப்படத்துக்கு புதிய கலரை கொடுத்திருக்கிறது. அதற்கு ஏற்றபடி ஹீரோயினை செலக்ட் செய்திருக்கிறார்கள். ஹீரோயினின் அப்பா கேரக்டர் நன்றாக நடித்திருக்கிறார்.
பரிதாபங்கள் கோபி: பெங்களூரு தமிழ் பையனாக பரிதாபங்கள் கோபி நடித்திருக்கிறார். ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். அது கொஞ்சம் ரசிக்கும்படியாக இருந்தது. நிறைய இயக்குநர்கள் முதல் படத்தில் முழு உழைப்பை போட்டு சூப்பராக கொடுத்துவிடுவார்கள். அந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை வாங்கிவிடும். ஆனால் வசூல் இருக்காது. அதனால் அந்த கோபத்திலேயே, 'நல்ல படம் எடுத்தால் பார்க்கமாட்டீர்கள். கமர்ஷியல் குப்பை என்றால் பார்ப்பீர்கள்தானே; இருங்கள் ஒரு கமர்ஷியல் குப்பையை நானும் உங்கள் தலையில் கட்டுகிறேன் என சொல்லி கட்டுவார்கள்.
நாம் பலியாவதா?: அதேபோல் இந்த இயக்குநரும், போன படம் ஜமா. ரொம்பவும் உண்மைக்கு நெருக்கமாக, நேர்மையான ஒரு படத்தை கொடுத்திருந்தார். ஆனால் அது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. அந்தக் கோபத்தில்தான் அவர் இப்படி ஒரு படத்தை எடுத்து நம் தலையில் கட்ட வந்திருக்கிறார். அவர் கோபமெல்லாம் நியாயம்தான். அதற்காக நாம் பலி ஆக முடியுமா?" என்றிருக்கிறார்.
More Articles
- Blue Sattai Maran's Arulvaan Review - அருள்வான் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. ஒரே குழப்பமாம்
- பாக்யராஜ் மறைவு.. விதவிதமாக போஸ் கொடுக்கிறாராம் பார்த்திபன்.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்
- Love Oh Love Blue Sattai Maran Review - லவ் ஓ லவ் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. கிழிச்சிட்டாரு ப்பா
- Idhayam Murali Bule Sattai Maran Review: லொக்கேஷன் தான் மாறுது கதை நகரல! இதயம் முரளி ப்ளூ சட்டை மாறன் ரிவ்யூவ்
- துறைமுகத்தில் தூள் பக்கோடா.. சேப்பாக்கத்தில் சேமியா பாயாசம்.. முதல்வர் விஜய்யை விமர்சித்த பிரபலம்!
- Gatta Kusthi 2 Blue Sattai Maran Review - கட்டா குஸ்தி 2 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. செம போங்க