சென்னை: 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத படங்களில் ஒன்று காதலன். இந்த படம் வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும், அந்த படத்தின் பாடல்கள் இன்னும் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இருக்கின்றன. பிரபுதேவா, நக்மா ஜோடி, சங்கர் இயக்கம், ஏ. ஆர். ரகுமான் இசை என அந்த காலத்தில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்தப் படத்தின் கதையை விட பாடலை மக்கள் இன்னும் முனுமுனுத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். "ஊர்வசி ஊர்வசி, என்னவளே அடி என்னவளே, முக்காலா முக்காபுலா போன்ற பாடல்கள் வந்தாலே 90ஸ் கிட்ஸ்களுக்கு இன்று கூட கால்கள் தானாக ஆட ஆரம்பித்துவிடும். உண்மையைச் சொன்னால், இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமே இசைதான். சரி... இப்போ ஃபன் ரோஸ்ட்டுக்கு போகலாம்!
காதலன்: படத்தில் கிரிஷ் கர்னாட் அரசியல்வாதியாக அதாவது மாநில ஆளுநராக காகர்லா சத்யநாராயணா என்கிற ரோலில் நடித்து இருப்பார். அவர் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக ரகுவரன் மூலம் பல இடங்களில் குண்டு வைக்க திட்டமிடுவார். அந்த திட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் நாட்டியாஞ்சலி விழாவில் குண்டு வைக்க பிளான் செய்வார்கள். அங்கே நம்ம ஹீரோயின் நக்மா நாட்டியம் ஆடணும்னு ஆசைப்படுவாங்க, ஆனால், வீட்டில் அப்பா போகக்கூடாதுனு சொல்லுறாரு. ஆனால், ஆசையை ஹீரோ பிரபுதேவாவிடம் சொல்ல, உடனே ஹீரோவை கூப்பிட்டு பைக்கில் சென்னையிலிருந்து சிதம்பரம் கிளம்பிடுறாங்க.
ஹீரோனா அடிப்பாரு: அதுவும் சாதாரண டிராவல் இல்லை, வழியெங்கும் அப்பாவின் செக்யூரிட்டி ஆட்கள் துரத்துவாங்க, ஆனால், நம்ம ஹீரோ எல்லாரையும் பறக்கவிட்டு அடிக்கிறார்... ஜீப்புகள் ஒன்றோடு ஒன்று மோதிப் பறக்குது.... ஆனால், பைக் மட்டும் கெத்தா போகுது. அந்த காட்சியை பார்க்கும்போது, என்ன கொடுமை சார் இதெல்லாம்ன்னு கேக்க தோணும். இதோட முக்கியமான விஷயம் என்னென்ன? துரத்திட்டு வர்றவங்களுக்கே ஏன் சண்டை போடுறாங்கன்னே தெரியாது. ஹீரோ அடிக்கணும், வில்லன் பறக்கணும் என்பதற்காக எல்லாரும் வேலைக்கு வந்த மாதிரி இருக்கும்.
கிளைமாக்ஸ் அலும்புகள்: அட இதெல்லாம் ஒன்றுமே இல்லைனு சொல்லும் அளவிற்கு கிளைமாக்ஸ் காட்சி இருக்கும். அதாவது, ஆளுநராக காகர்லா மருத்துவமனையில் டைம் பாம் வைக்க சொல்லிடுவாடு, வில்லன் ரகுவரனும் வெச்சிடுவாரு, இந்த விஷயம் பிரபுதேவாவிற்கு தெரிந்து, அவர் அதிரடியாக மருத்துவமனைக்கு புகுந்து குண்டை தேடுவாரு. பாம் ஸ்குவாட், போலீசு என பலரும் தேடிக்கொண்டு இருக்க, அந்த குண்டு நம்ம ஹீரோ பிரபு தேவா கண்ணுலபடுது. இன்னும் இரண்டு நிமிடத்தில் வெடிக்கப் போகுதாம். உடனே நம்ம பிரபுதேவா அந்த குண்டை தூக்கிக்கிட்டு ஓட ஆரம்பிக்கிறார். எங்கே தெரியுமா? சென்னை சென்ட்ரலில் இருக்கும் மருத்துவமனையிலிருந்து நேராக நேப்பியர் பாலம் வரை.. அதுவும் குண்டு கையில் எடுத்துக்கொண்டு, கூட்டத்தை விலக்கிவிட்டு ஓடி, பாலத்துக்குப் போய் தண்ணீரில் தூக்கி போடுறாரு... அப்போதான் சரியாக அந்த குண்டு வெடிக்குது.
சங்கர் பூ சுத்தியிருக்காரே?: அந்த காலத்தில் இந்த சீனைப்பார்த்து, "வாவ்... என்ன ஒரு ஹீரோ"ன்னுகைதட்டினோம். ஆனால், இப்போ இந்த சீனை பார்க்கும் ஜென்சி கிட்ஸ் குண்டுக்கும் கூகுள் மேப் போட்டாங்களா? சரியாக பாலத்துக்குப் போன பிறகுதான் வெடிக்குதேனு கிண்டலடிக்கிறார்கள் அந்தக் காலத்தில் இப்படிப்பட்ட லாஜிக் மீறல்கள் ரசிகர்களுக்கு பெரிய விஷயமே இல்லை. நல்ல பாடல்கள், சுவாரசியமான திரைக்கதை, பிரபுதேவாவின் டான்ஸ், சங்கரின் பிரம்மாண்ட காட்சிகள் இவையெல்லாம் சேர்ந்து அந்த குறைகளை மறைத்துவிட்டன. ஆனால், இப்போ அந்த படத்தைப் பார்க்கும்போது, அடடா... நம்ம சங்கர் இவ்வளவு பூ சுத்தியிருக்காரானு கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
More Articles
- A.R.Rahman - காதலன் பட மொத்த இசையை டெலிட் செய்த சவுண்ட் இன்ஜினியர்.. சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்
- முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்.. திருமணம் செய்து கொள்ளாத நக்மாவின் மறுபக்கம்!
- கொஞ்சம் பிளாஷ்பேக்: ஷங்கரின் அந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்க இருந்த ஜோடி இவர்கள்தான்!
- பிரபுதேவா பிறந்தநாள்.. நடன புயலின் சொத்து மதிப்பு இவ்வளவா?.. அடேங்கப்பா அசத்துறாரே
- பிரபுதேவாவின் மகளை பாருங்க.. செம க்யூட்.. நடிகை ரம்பா வெளியிட்ட போட்டோ!
- மும்பையில் பல கோடி ரூபாய்க்கு வீடுகள்.. விற்றுவிட்ட பிரபுதேவா?.. எவ்வளவுக்கு விற்றார் தெரியுமா?