சென்னை: நடிகர் முரளியின் மகன் அதர்வா. தமிழ் சினிமாவில் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் என்று பெயர் எடுத்தாலும்; இன்னும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றே கருதப்படுகிறது. அவர் இப்போது ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், ஃபகத் பாசில், டிராவிட் செல்வம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். படம் இன்று வெளியாகும் சூழலில் அதன் முதல் விமர்சனம் வந்திருக்கிறது.

Advertisement

கோலிவுட்டின் ஆல்டைம் ஃபேவரைட் ஹீரோக்களில் ஒருவர் முரளி. அவரது மகன் அதர்வா; பாணா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, ஈட்டி என பல படங்களில் நடித்தார். அவர் நடித்த படங்களில் வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வந்தன. ஆனால் அவருக்கான நல்ல பெயர் மட்டும் நிலையாக வந்துகொண்டே இருந்தது. இதனால் கோலிவுட்டின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவராக மாறினார்.

Advertisement

Photo Credit:

அங்கீகாரம் கிடைக்கவில்லை: நடனம், நடிப்பு, ஆக்‌ஷன், அழகு என ஒரு ஹீரோவுக்கு தேவையான அத்தனையும் அதர்வாவிடம் இருக்கிறது. போதாக்குறைக்கு வெறித்தனமாக உழைக்கிறார். இவ்வளவு இருந்தும் அவருக்கு உரிய அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. அந்த நிலைமையை இன்று ரிலீஸாகும் இதயம் முரளி திரைப்படம் மொத்தமாக மாற்றிக்கட்டும் என்ற நம்பிக்கை அவரிடமும், அவரது ரசிகர்களிடமும் வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதயம் முரளி: இதயம் முரளி திரைப்படத்தை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கிறார். இதில் அதர்வாவுடன் ஃபகத் பாசில், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை பற்ற வைத்திருக்கிறது. ட்ரெய்லரை பார்க்கையில் இப்படம் காதல் ஜானரில் ஃபீல் குட்டாக அமையுமா என்ற ஹைப்பும் ஏறியிருக்கிறது.

படத்தின் முதல் விமர்சனம்: படமானது இன்று தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ப்ரீ புக்கிங் நிலவரம் எல்லாம் டீசன்ட்டாகவே இருக்கின்றன. இந்நிலையில் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ்; இதயம் முரளி படத்தை பார்த்துவிட்டு தனது விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். அவர் தன் எக்ஸ் பக்கத்தில், "இதயம் முரளி திரைப்படம் உங்களை அழகான நினைவு பயணத்துக்கு அழைத்து செல்கிறது. படம் முடிந்த பிறகும் நீங்காத ஏக்கத்தையும், இனிய நினைவுகளையும் மனதில் விட்டுவிட்டு செல்கிறது.

Advertisement

அசத்தலான அறிமுகம்: ஆகாஷ் பாஸ்கரன் நீங்கள் இனி நீண்ட பயணம் செய்யப்போகிறீர்கள். என்ன ஒரு அசத்தலான அறிமுகம். அதர்வா முரளி முழு படத்தையும் தனது தோள்களில் சுமந்து மிகச்சிறப்பாக முன்னெடுத்து சென்றிருக்கிறார். அற்புதமான ஒளிப்பதிவை வழங்கிய ஒளிப்பதிவாளர்கள் சாய் மற்றும் மனோஜ், மேலும் பாத்தின் உயிராக திகழும் பின்னணி இசையை வழங்கிய தமன் ஆகியோருக்கு சிறப்பான பாராட்டுக்கள். இதயம் தொட்ட அழகான திரைப்படத்தை வழங்கிய படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இவரது விமர்சனம் செம பாசிட்டிவ்வாக வந்திருப்பதால்; படம் பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் மேற்கொண்டு அதிகரித்திருக்கிறது.