சென்னை: அதர்வா, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியிருக்கும் திரைப்படம் இதயம் முரளி. தமன் இசையமைத்திருக்கும் இப்படமானது இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் தங்களது எக்ஸ் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள். இதுவரை படம் பார்த்தவர்கள் பாசிட்டிவ்வான விமர்சனத்தையே சொல்லியிருக்கிறார்கள்.

Advertisement

முரளியின் மகனான அதர்வா; கோலிவுட்டில் திறமை வாய்ந்த நடிகர் என்று பெயர் எடுத்தவர். சினிமாவுக்குள் வந்த சில வருடங்களிலேயே பாலா இயக்கத்தில் பரதேசி படத்தில் நடித்து அசத்தினார். தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும்; இன்னும் அவருக்கு தேவையான உயரம் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இருப்பினும் எப்படியாவது தனக்கான இடத்தை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் காத்திரமாக உழைத்துக்கொண்டிருக்கிறார் அவர்.

Advertisement

Photo Credit:

இதயம் முரளி: இப்போது அவர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் இதயம் முரளி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் ஃபகத் பாசில், தமன், கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், பரிதாபங்கள் டிராவிட் செல்வம், சுதாகர் என பலர் நடித்திருக்கிறார்கள். இன்று திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்கள்.

இதயம் முரளி எக்ஸ் விமர்சனம்: படம் பார்த்த இந்த ரசிகர், "அதர்வா தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ப்ரீத்தி முகுந்தன் மற்றும் கயாடு லோஹர் இரண்டு பேரும் அழகாக வசீகரிக்கிறார்கள்.

Advertisement

நண்பர்கள் இடையேயான பந்தம், பள்ளி வாழ்க்கையின் ஜாலியான தருணங்கள், சுதாகரின் நகைச்சுவை எல்லாம் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. தமனின் இசை படத்துக்கு பலம். ஆகாஷ் பாஸ்கரின் திரைக்கதை; 90ஸின் நினைவுகளை மீண்டும் உயிரிப்பித்திருக்கிறது" என தெரிவித்திருக்கிறார்.

அதர்வாவின் கம்பேக்: படம் பார்த்துவிட்ட இன்னொருவர், "சாக்லேட் பாய் அதர்வா மீண்டும் வந்துவிட்டார். 90களில் பள்ளியில் படித்தவர்களின் இனிய நினைவுகளை மீண்டும் மனதில் கொண்டு வருகிறது. ஒருதலை காதல் கதை பழைய இதயம் முரளியை நினைவுப்படுத்துகிறது. ப்ரீத்தி முகுந்தனும், கயாடு லோஹரும் அழகாக் தோன்றுகிறார்கள். ஒளிப்பதிவு, தமனின் இசையும் படத்துக்கு பெரிய பலமாக இருக்கின்றன. சுதாகரின் நகைச்சுவை ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஃபகத் பாசிலின் கேரக்டரும் ரசிக்க வைக்கிறது" என பாராட்டியிருக்கிறார்.

Advertisement

படத்துக்கு பாசிட்டிவ்தான்: அதேபோல் இன்னொரு ரசிகர், "இதயம் முரளி முதல் பாதி நன்றாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. அதர்வா நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.கயாடுவுக்கும், ப்ரீத்திக்கும் வலுவான கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கின்றன. சுதாகரின் நகைச்சுவை சூப்பராக கை கொடுத்திருக்கிறது. தமனின் இசை படத்தின் உயிராக இருக்கிறது. எளிமையான கதைதான். ஆனால் சிறப்பான மேக்கிங், அற்புதமான ஒளிப்பதிவு. ஆகாஷ் பாஸ்கரன் இதுவரை படத்தை மிகவும் சூப்பராக கையாண்டிருக்கிறார்" என கூறியுள்ளார். இப்படி பலரும் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனத்தையே கொடுத்துவருகிறார்கள்.