சென்னை: முதலமைச்சர் விஜய் நடித்து வெளியாகி உள்ள படம் ஜன நாயகன். படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்கி உள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படி இருக்கையில் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
படம் பார்த்த ரசிகர் ஒருவரோ, படம் நன்றாக உள்ளது, இனிமேல் இப்படி ஒரு சம்பவம் வாழ்க்கையில் நடக்கப்போவது இல்லை என்ற வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனது அப்பா, அம்மாவை விட தளபதியை தான் அதிகம் பிடிக்கும். அவரைப் பார்த்து தான் வளர்ந்தேன் என்று மிகவும் எமோஷனலாக அழுது கொண்டே பேசினார். அதுவும் இவர் படம் நன்றாக உள்ளது, நாங்கள் எதிர்பார்த்த அனைத்துமே படத்தில் இருந்தது. தளபதி எங்களுக்காவே இந்த படத்தில் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் முடிந்து அவரது படங்களின் கிளிப்களை பார்க்கும் போது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை" என்று தெரிவித்தார்.
அதேபோல் ரசிகை ஒருவர் கூறுகையில், " மிகவும் எமோஷனலாக உள்ளது. படம் செம்மையா இருக்கு, நான் தளபதியை ரொம்பவும் மிஸ் செய்யப்போறேன். லாஸ்ட் டைம் ஸ்கீரினில் பார்க்கிறோம்.. அதான் வலிக்குது" என்று அழுது கொண்டே கூறினார்.
ஒரே வருத்தம்: அதேபோல், ரசிகர் ஒருவர் கூறுகையில், படத்தில் சொல்லப்பட்ட கருத்துக்காகத்தான் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதை முதலிலேயே, ரிலீஸ் செய்திருந்தால் தேர்தலில் இதைவிடக் கூடுதலாக அதிக இடங்களில் வென்றிருப்பார்" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் கூறுகையில், படம் நன்றாக உள்ளது, ஆனால் அந்த ரோபோவுடன் சண்டை போடாமல் இருந்திருக்கலாம். படத்தை பாராட்டலாம், ஆனால் இருக்கக்கூடிய ஒரே ஒரு வருத்தம் என்றால் அது தளபதியின் கடைசி படம் என்பது மட்டும் தான் என்று மிகவும் எமோஷனலாக நெஞ்சில் கை வைத்துக்கொண்டு கூறினார்.
பாக்ஸ் ஆபீஸ்: மற்றொரு ரசிகர் கூறும்போது படம் நன்றாக உள்ளது, ஏற்கனவே படம் இணையத்தில் லீக் ஆகி இருந்தாலும், தயாரிப்பாளருக்கு படம் கட்டாயம் லாபம் கொடுக்கும். படம் பாக்ஸ் ஆபீஸிலும் சம்பவம் செய்யும். படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு படத்தில் மக்களுக்கு கருத்து சொல்லப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
More Articles
- விஜய்யை முதல் நாள் விமர்சித்த பிரகாஷ் ராஜ்.. ஜனநாயகன் ஷூட்டில் அடுத்த நாள் தளபதி செய்தது தெரியுமா?
- யூடியூபர் நள்ளிரவில் கைது.. கொஞ்சும் கூட வெட்கமில்லாத பழிவாங்கும் வேலை.. கொந்தளித்த பிரகாஷ் ராஜ்!
- உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த வாரணாசி படத்தின் கதை இதுதான்.. ராஜமௌலி செய்யப் போகும் தரமான சம்பவம்
- கவர்னர் பிஹேவ் பண்றது சகிக்கல.. விஜய் முதலமைச்சராக வேண்டும்.. திடீர் பல்டி அடித்த பிரகாஷ் ராஜ்!
- தமிழ்நாடு ரசிகர் மயமாகி விட்டது.. விஜய்யின் வெற்றியை வாழ்த்தோடு விளாசிய ஜனநாயகன் பட நடிகர்
- ஒன்னாம் நம்பர் ஃபிராடு.. பிரகாஷ் ராஜ் அப்பா என்ன வேலை செய்தார்? கொந்தளித்த பேரரசு!