Laal Singh Chaddha Twitter Review: அமீர்கானின் லால் சிங் சத்தா படம் எப்படி இருக்கு?


சென்னை: சராசரி குழந்தைகளை விட குறைவான ஐக்யூ லெவல் கொண்ட லால் சிங் சத்தா என்கிற மனிதனின் வாழ்க்கையையும் அவனுக்கு கிடைக்கும் அந்த காதலும் அதற்கு பின்னால் வரும் ஏமாற்றங்களும் தான் லால் சிங் சத்தா படத்தின் கதை.

Advertisement

ஹாலிவுட்டில் டாம் ஹேங்ஸ் நடிப்பில் வெளியாகி ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது.

Advertisement

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இன்று வெளியாகி உள்ள அமீர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், படமாக அந்த படம் எப்படி இருக்கிறது என படத்தை பார்த்த ரசிகர்கள் கூறும் விமர்சனங்களை இங்கே பார்ப்போம்..

இதை யாரும் எதிர்பார்க்கல.. லால் சிங் சத்தா படத்திலும் ஷாருக்கான் கேமியோ.. டிரெண்டாகும் வீடியோ!

அதுல் குல்கர்னி அசத்தல்

ரன், படிக்காதவன் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டிய அதுல் குல்கர்னி தான் ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப்பை நம்ம நாட்டு ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றி திரைக்கதை வடிவமைத்து நடிகர் அமீர்கானை வற்புறுத்தி இந்த படத்தை பண்ண வைத்திருக்கிறார். படத்தை பார்த்த இந்த ரசிகர் இது ஒரு பர்ஃபெக்ட்டான பாலிவுட் படமாக அமைந்துள்ளது. சில இடங்களில் துக்கம் தொண்டையை அடைக்கும், சில இடங்களில் சிரிக்க வைக்கும் உன்னதமான படம் என பாராட்டி உள்ளார்.

Advertisement

அமீர்கான் vs அக்‌ஷய் குமார்

அமீர்கானின் லால் சிங் சத்தா பெரிய நகரங்களிலும் மெட்ரோக்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என நினைக்கிறேன். அதே சமயம் அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் திரைப்படம் கிராமங்களில் கல்லா கட்டும் என இந்த நெட்டிசன் கருத்து கூறியுள்ளார். அமீர்கானின் லால் சிங் சத்தா படம் ஒரு எபிக் என்றும் விமர்சித்துள்ளார்.

Advertisement

வெளிநாடுகளில் வரவேற்பு

டாம் ஹேங்ஸ் நடித்த ஹாலிவுட் படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்திற்கு கொஞ்சம் கூட குறைவோ அதிகமோ இல்லாமல் சரியாக வந்திருக்கும் தரமான படம் என பிரபல இங்கிலாந்து பத்திரிகையான தி கார்டியன் தனது விமர்சனத்தை வைத்துள்ளது. அதனை இந்த நெட்டிசன் ஷேர் செய்து லால் சிங் சத்தா தரமான படம் என்றும் ரசிகர்களை நிச்சயம் தியேட்டருக்கு கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.

மிஸ் பண்ணிடாதீங்க

அமீர்கானை எதிர்க்கிறேன் என அத்வைத் சந்தனின் இந்த அழகான படத்தை மிஸ் பண்ணிடாதீங்க, வாழ்க்கையின் தத்துவத்தை அப்படியே எடுத்து உரைக்கிறது இந்த படம். முழுவதுமே பாசிட்டிவிட்டி தான். அன்பை லால் சிங் சத்தாவாக பரப்பி இருக்கிறார் அமீர்கான் என பாராட்டி வருகின்றனர்.

வசூல் எப்படி இருக்கும்

ஒரு பக்கம் படத்திற்கு எதிரான நெகட்டிவ் டிரெண்டிங் மற்றும் மறுபுறம் படத்தை பார்த்தவர்கள் சொல்லும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்துள்ள நிலையில், லால் சிங் சத்தாவின் வசூல் உலகளவில் எப்படி வந்திருக்கிறது என்பதை நாளை தெரிந்து விடும். முதல் நாள் வசூலை விட வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

Aamir Khan's Laal Singh Chaddha Twitter Review and Reactions are here. Fans celebrating the movie over against Boycott trending on social media.