சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் அவரது கடைசி படமான ஜனநாயகன் நாளை ரிலீஸாகவிருக்கிறது. ஏற்கனவே படம் லீக் ஆகியிருந்தாலும்; தியேட்டரில் சென்று படம் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். டிக்கெட் முன்பதிவும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சூப்பராகவே நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஜனநாயகன் படத்தை பார்த்துவிட்டு விஜய் சொன்ன விமர்சனம் குறித்து தெரியவந்திருக்கிறது. அது ரசிகர்களை மகிழ்ச்சியடையவும் செய்திருக்கிறது.

Advertisement

அரசியலுக்கு வந்துவிட்டதால் சினிமாவிலிருந்து ஒதுங்க முடிவு செய்த விஜய்; தன்னுடைய கடைசி படமாக ஜனநாயகனையும், இயக்குநராக ஹெச்.வினோத்தையும் டிக் செய்தார். இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை இப்படம் பெரும் போராட்டங்களை சந்தித்தது. சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் நீதிமன்றம் சென்றது, பிறகு மறு தணிக்கையின்போதும் அலட்சிப்படுத்திய அதிகாரிகள், எல்லாவற்றுக்கும் மேலாக மொத்த படமும் இணையத்தில் லீக்கானது என பல அநியாயங்களை சந்தித்தது.

Advertisement

Photo Credit:

படத்துக்கு சான்றிதழ்: ஒருவழியாக சில வாரங்களுக்கு முன்பு படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. சான்றிதழ் கிடைத்ததே பெரிது என்பதால் ஏவுக்கு எதிராக சண்டையிட்டு மாற்றுவதற்கு நேரமும், தெம்பும் படக்குழுவிடம் இல்லை. கிடைத்த சான்றிதழை வைத்துக்கொண்டு நாளை படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். 18 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் படத்தை பார்க்க முடியாத நிலைமை உருவாகியிருக்கிறது. அது கொஞ்சம் வருத்தம் தருவதாக இயக்குநர் வினோத் நேற்று கூறியிருந்தார்.

எப்படி இருக்கும் படம்?: இந்தப் படம் பகவந்த் கேசரியின் ரீமேக்தான் என்றாலும்; முழுக்க முழுக்க அதன் தமிழ் வடிவம் இல்லை; 50 சதவீதம் அந்தப் படத்தின் கதையும், 50 சதவீதம் புதிய கதையையும் சேர்த்து ஜனநாயகன் படத்தை உருவாக்கியிருக்கிறார் வினோத். இதுவரை வந்த ட்ரெய்லர், ப்ரோமோ வீடியோக்களில் எல்லாம் விஜய்யின் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸ் தீ போல் இருக்கிறது. கண்டிப்பாக தியேட்டரிக்கல் மொமண்ட்ஸ் நிறையவே இப்படத்தில் இருக்கும். இது விஜய்யின் கடைசி படம் வேறு. எனவே தியேட்டர்களை நாளை ஒருவழியாக்கிவிடுவார்கள் விஜய் ரசிகர்கள்.

Advertisement

டிக்கெட் முன்பதிவு சூப்பர்: படம் ஏற்கனவே லீக்காகிவிட்டது. ஆனால் இப்போது புதிய விஷயங்கள் படங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிவிப்பு வந்திருக்கிறது. டிக்கெட் முன்பதிவு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தொடங்கிவிட்டது. தொடங்கிய சில மணி நேரங்களில் பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல்லாகிவிட்டன. நிச்சயம் இப்படம் ப்ரீ புக்கிங்கிலும், வசூலிலும் பெரிய சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்நிலையில் அனைத்து திரை விமர்சகர்களும் நாளை ஜனநாயகன் மீது கண் வைத்திருக்கிறார்கள்.

விஜய்யின் விமர்சனம்: சூழல் இப்படி இருக்க விஜய் ஜனநாயகன் படத்தை பார்த்திருக்கிறார். அதாவது முதலில் படத்தை பார்த்துவிட்டு; சில கருத்துக்களை ஹெச்.வினோத்திடம் கூறினாராம். அதனையடுத்து மீண்டும் சில நாட்கள் கழித்து பார்த்துவிட்டு, 'சூப்பர் ப்பா.. இதையே நாம் லாக் செய்துகொள்ளலாம்' என கூறினாராம். ஆக, இரண்டு முறை படத்தை பார்த்த விஜய்; வினோத்திடம் சூப்பர் என விமர்சனம் கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. தளபதியே படத்துக்கு இப்படி ஒரு சூப்பரான விமர்சனத்தை கொடுத்துவிட்டதால்; படம் தரமான சம்பவம் செய்யும் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனை வினோத் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.