Rating:
4.0/5

சென்னை: இப்படியெல்லாம் ஒரு இயக்குநர் இனிமேல் கிடைப்பார்களா என்கிற அளவுக்கு கிறிஸ்டோபர் நோலனின் மேக்கிங் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. அதிகப்படியாக சிஜி, ஏஐ என பயன்படுத்தப்பட்டு வரும் உலகில் சினிமா தொழில்நுட்பத்தையும் நடிகர்களின் நடிப்பின் ஆழத்தையும் கலை இயக்குநர்களின் கலை படைப்பையும் பயன்படுத்தி இப்படியொரு பிரம்மாண்ட படைப்பை கொடுக்க நோலனால் மட்டுமே முடியும் என்பதை சாதித்துக் காட்டியுள்ளார்.

Advertisement

தி ஒடிஸி திரைப்படத்தை கிறிஸ்டோபர் நோலன் ஐமேக்ஸ் கேமரா பயன்படுத்தி உருவாக்கிய நிலையில், உலகளவில் 40 திரையரங்குகளில் மட்டுமே ஒரிஜினல் ஐமேக்ஸ் புரொஜக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் இந்தியாவில் பார்க்கும் நமக்கெல்லாம் அந்த கொடுப்பினை இல்லை எனக் கூறுகின்றனர்.

Advertisement

ஆனால், இந்தியர்கள் அருகில் உள்ள எந்தவொரு நல்ல திரையரங்கு இருந்தாலும் இந்த அனுபவத்தை மிஸ் செய்யாமல் ஒருமுறை அனுபவித்து விடுங்கள். சரி தி ஒடிஸி படத்தின் கதை, பிளஸ், மைனஸ் உள்ளிட்டவற்றை விரிவாக இந்த விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க..

தி ஒடிஸி கதை: கிரேக்க எழுத்தாளர் ஹோமர் எழுதிய ஒடிஸி கதையை தழுவி உருவாக்கப்பட்ட காவியம் தான் இந்த தி ஒடிஸி. இந்தியாவின் புராண நூல்களான ராமாயணம், மகாபாரதம் கதைகளை வைத்து பல பிரம்மாண்ட படங்கள் உருவாக்கப்பட்டு வருவதை போல கிரேக்க கதையான ஒடிஸியை கையிலெடுத்து கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ளார்.

Advertisement

டிராய் படத்தை பல ஹாலிவுட் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். அந்த மரக்குதிரையில் ரகசியமாக கடலில் இருந்து வந்த வீரர்களில் ஒருவரான ஒடிஸியஸ் (மேட் டேமன்) இதாகா ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வருகிறார். ஆனால், தனது மனைவி மற்றும் குழந்தைகளை விடுத்து கடல் பயணத்தை மேற்கொள்ளும் அவர் பல ஆண்டுகளாக திரும்பி வரவே இல்லை.

ஒடிஸியஸ் உயிரோடு இருக்காரா? இல்லையா? என்பதை கண்டறிந்து வருவதற்காக வயதுக்கு வந்த அவரது மகன் டெலிமாக்கஸ் (டாம் ஹாலண்ட்) கடல் பயணம் மேற்கொள்கிறார். வந்தேறிகளாக வந்தவர்களில் ஆண்டினஸ் (ராபர்ட் பாட்டின்சன்) ஒடிஸியஸின் மனைவி பெனோலப்பை (அன்னா ஹாத்வே) மறுமணம் செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

ஒடிஸியஸ் உயிரோடு உள்ளாரா? மீண்டு தனது ராஜ்ஜியத்துக்கு திரும்பினாரா? அவருக்கு என்ன ஆனது? அவரது கதைகளில் வரும் கண்டங்களும் ஜியூஸ் கடவுளின் தண்டனையும் என்ன ஆனது? என்கிற அனைத்துக் கேள்விகளுக்குமான விடை தான் இந்த தி ஒடிஸி திரைப்படம்.

படம் எப்படி இருக்கு?: மேட் டேமன் ஒடிஸியஸாக அப்படியே வாழ்ந்துள்ளார் என்றே சொல்லலாம். கிரேக்க கதைகள், மாயாஜாலம் நிறைந்த கதையாக இருந்தாலும் அதிகப்படியான சிஜி காட்சிகளை பயன்படுத்தாமல் நெடிய ஒற்றைக் கண் ராட்சதன், உயரமான போர் வீரர்கள் உள்ள தீவு, மனிதர்களை பன்றிகளாக மாற்றும் மாயக்காரி உள்ள தீவு, தாமரைப்பூவை கொடுத்து பல வருடங்களாக மயக்கி வைக்கும் மாயக்காரி, இறந்த வீரர்கள் இருக்கும் கடல் தீவு என ஹோமர் எழுதிய கிரேக்க கதைக்கு எந்தளவுக்கு உயிரோட்டம் கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு உயிர் கொடுத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.

Advertisement

மேட் டேமன், ராபர்ட் பாட்டின்சன், டாம் ஹாலண்ட், அன்னா ஹாத்வே, ஏதேனாவாக வரும் ஜெண்டயா, கலிப்ஸோவாக வரும் சார்லிஸ் தெரான் என லீடு நடிகர்களின் நடிப்பு எல்லாம் அட்டகாசம். கடலில் பயணிக்கும் காட்சிகள், மாயாஜால காட்சிகளின் பிரம்மிப்பு எல்லாமே லைஃப் டைம் எக்ஸ்பீரியன்ஸ்.

பிளஸ்: கிறிஸ்டோபர் நோலன் என்கிற ஒரு பெயர் போதும் படத்திற்கு தாராளமாக ஐமேக்ஸ் தியேட்டரில் 1000 ரூபாய் டிக்கெட் கூட கொடுத்து பார்த்து விடலாம். இன்றளவும் தன்னை நம்பி வரும் ரசிகர்களுக்கு நல்ல திரையனுபவம் கொடுப்பதில் எந்தவொரு ஏமாற்று வேலையும் செய்யாமல் கேப்டன் ஆஃப் தி ஷிப்பாகவே உள்ளார். டிபி ஹோய்டே வேன் ஹோய்டேமாவின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தின் உச்சம். கிறிஸ்டோபர் நோலனின் மூளைக்குள் இருந்த ஒடிஸி கதையை திரை ஓவியமாக கொடுத்துள்ளார். லுட்விக் கோரன்ஸின் அந்த திக் திக் திக் தீம் மியூசிக் எல்லாம் ஆஸ்கர் விருதை கண்டிப்பாக வெல்லும் என்றே தெரிகிறது.

Advertisement

மைனஸ்: அவெஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன், காட் ஆஃப் எகிப்த் உள்ளிட்ட படங்களை பார்த்த ரசிகர்களுக்கு இந்த கிரேக்கா டிராமா சற்றே போரடிக்கும். டாம் ஹாலண்ட் கூடவே இலவச இணைப்பாக ஜெண்டாயா வருகிறாரா? என்கிற காஸ்டிங் பிரச்னையும் லேசான மைனஸ் ஆக உள்ளது. என்னடா ஒடிஸி படம்னு சொல்லிட்டு வில் வித்தை அர்ஜுனனை காட்டுறீங்க என்றும் சிலர் கேட்கலாம். கிரேக்க கதைகளுக்கும் கர்ணன் கதைக்குமே சில சம்பந்தங்கள் இருப்பது தனிக்கதை. ஸ்லோவாக செல்லும் திரைக்கதை நம்ப முடியாத புராண கதாபாத்திரங்கள் மைனஸ் ஆக தெரியலாம். ஆனால், எடுத்துக் கொண்ட கிரேக்க கதையை திரையில் காட்ட கிறிஸ்டொபர் நோலன் மற்றும் அவரை நம்பி படத்தில் களமிறங்கியுள்ள நடிகர்களின் நடிப்புக்காக தாராளமாக தியேட்டரில் பார்க்கலாம்.